தேடுதல்

புனிதர் பட்டமளிப்பு திருப்பலி 15052022 புனிதர் பட்டமளிப்பு திருப்பலி 15052022  (Vatican Media)

வாரம் ஓர் அலசல்: இந்தியாவின் முதல் இல்லற புனிதர் தேவசகாயம்

வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்திலும், அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் வெள்ளமென கூடியிருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகள் நம் மறைசாட்சி புனிதர் தேவசகாயத்தின் வீரவாழ்வு மற்றும், வீரமரணத்தை அறிந்து ஆர்ப்பரித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 15 இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமிழகத்தின், மறைசாட்சி தேவசகாயம் அவர்களை அதிகாரப்பூர்வமாக புனிதராக அறிவித்தார். வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்திலும், அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் வெள்ளமென கூடியிருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகள் நம் மறைசாட்சி புனிதரின் வீரவாழ்வு மற்றும், மரணத்தை அறிந்து ஆர்ப்பரித்தனர். இவ்வாறு நம் புனிதர், இந்தியாவின், குறிப்பாக, தமிழகத்தின் ஆன்மீகத்தை உலகறியச் செய்துள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் அவர்கள், புனிதராக அறிவிக்கப்பட்ட இத்திருப்பலியில், இந்தியாவின் 3 கர்தினால்கள், தமிழக ஆயர் பேரவையின் தலைவர் நன்மதிப்புக்குரிய பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் மூன்று பேராயர்கள், இன்னும் தமிழக மற்றும், இந்தியாவிலிருந்து பல ஆயர்கள் பங்குபெற்றனர். இந்நேரத்தில் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் தனது உள்ளத்தில் எழுந்துள்ள உணர்வுகளை வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொள்கிறார். இன்றைய வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் இந்தப் பகிர்வை மகிழ்ச்சியோடு வழங்குகிறோம்  

இந்தியாவின் முதல் இல்லற புனிதர் தேவசகாயம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2022, 15:37