தேடுதல்

சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்கும் இயேசு சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்கும் இயேசு  

தடம் தந்த தகைமை – இறுதிவரை மன உறுதியுடன்

மாற்றுச் சிந்தனைகள் வீரியமிக்க விதைகள் போன்றவை. விதை மண்ணுக்குள் புதைந்து போராடி முளைப்பது போலத்தான் மாற்றங்களும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர் என்றார் இயேசு.

இயேசுவைத் தங்கள் இன எதிரியாகப் பார்த்தனர் யூதர்கள். அவரது அணுகுமுறைகள் ஒவ்வொன்றையும் அணுஅணுவாக அலசி விமர்சித்தனர். அவரை மட்டுமல்லாமல் அவரை ஏற்றவர்களையும், பின்பற்றியவர்களையும் வெறுத்தனர், பகைத்தனர், எதிர்த்தனர். அவரது மாற்றுச் சிந்தனைகளால் மிரண்டுபோயினர். எனவே, எப்படியேனும் இயேசுவையும் அவரது குழுமத்தையும் ஒழித்துவிட வேண்டும் எனத் தவியாய்த் தவித்தனர்.

மாற்றுச் சிந்தனைகள் வீரியமிக்க விதைகள் போன்றவை. விதை மண்ணுக்குள் புதைந்து போராடி முளைப்பது போலத்தான் மாற்றங்களும். மாற்றத்தை ஏற்போர்க்கும், அதைச் சமூகத்துள் நிலைநாட்ட விழைவோருக்குமான அடிப்படைத் தேவை மன உறுதி.

நேர்மை உள்ளவரிடத்தில் மன உறுதி நிறைந்திருக்கும். அதுவே பணிவான, துணிவான செயல்களைச் செய்ய வலிமை வழங்கும். போராடும்போது வீண்முயற்சி என்பர், வென்றபின் மன உறுதி என்பர்.

இறைவா! என் உறுதி நீர்தாம். உறுதிப்பாட்டை இழக்கிறேனென்றால் உம்மைப் பிரிகிறேன் என்றுணர்ந்து உம்மில் உறுதியாய் வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2024, 15:37