தேடுதல்

திருப்பியளிக்கப்பட்ட சூனேம் பெண்ணின் உடைமைகள் திருப்பியளிக்கப்பட்ட சூனேம் பெண்ணின் உடைமைகள் 

தடம் தந்த தகைமை – திருப்பியளிக்கப்பட்ட சூனேம் பெண்ணின் உடைமைகள்

அரசன் ஓர் அலுவலனை அழைத்து, “அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திருப்பிக் கொடுத்து விடு என்றான்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எலிசாவின் சீடன் கேகசி, எலிசா இறைவாக்கினர் இறந்தவனை உயிர்ப்பித்துக் கொடுத்த நிகழ்ச்சியை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தான். உயிர்ப்பிக்கப்பட்ட அதே சிறுவனின் தாய் அப்பொழுது அரசன்முன் வந்து, தம் வீட்டையும் நிலங்களையும் முன்னிட்டு அரசனிடம் முறையிட்டார். அப்பொழுது கேகசி, “அரசே! என் தலைவரே! இவள்தான் அந்தப் பெண். இவள் மகனாகிய இவனைத்தான் எலிசா உயிர்ப்பித்தார்” என்றான்.

அரசன் அந்தப் பெண்ணிடம் அதைப்பற்றி வினவ, அவரும் நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார். அப்பொழுது அரசன் ஓர் அலுவலனை அழைத்து, “அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திருப்பிக் கொடுத்து விடு. மேலும், அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள்முதல் இன்றுவரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 மே 2024, 08:01