தேடுதல்

வத்திக்கானின் தூய பேதுரு வளாகம் வத்திக்கானின் தூய பேதுரு வளாகம்  (VATICAN MEDIA)

திருத்தந்தை, சைப்ரஸ் நிறுவனத்தின் தலைவர் Papanicolas சந்திப்பு

பேறுநிலை, புனிதத்துவம் என்பதெல்லாம், கடவுளின் அன்புக் குழந்தைகளாய் வாழ்வதை மகிழ்ச்சியோடு கண்டுகொள்வதாகும் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

பேறுநிலை, புனிதத்துவம் என்பதெல்லாம், கடவுளின் அன்புக் குழந்தைகளாய் வாழ்வதை மகிழ்ச்சியோடு கண்டுகொள்வதாகும் என்று, மே 16, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மே 15, இஞ்ஞாயிறு காலையில் பத்து புதிய புனிதர்களை திருஅவைக்கு அறிவித்து, நாம் அனைவரும் புனிதர்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள, ஒரு குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பேறுநிலை, புனிதத்துவம் என்பதெல்லாம், முயற்சி மற்றும், அனைத்தையும் துறத்தல் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட வாழ்வுத் திட்டம் அல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளின் அன்புக் குழந்தைகளாய் வாழ்வதை மகிழ்ச்சியோடு கண்டுகொள்வதாகும் என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

டைட்டஸ் பிரான்ட்ஸ்மா; தேவசகாயம்; சீசர் தெ புஸ்; லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ; ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ; சார்ல்ஸ் து ஃபுக்கு; மரிய ரிவியெர்; மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ; இயேசுவின் மரிய சாந்தோகனாலே; மரிய தொமேனிக்கோ மாந்தோவானி ஆகியோரை திருத்தந்தை இஞ்ஞாயிறன்று புனிதர்களாக அறிவித்தார்.

மேலும், சைப்ரஸ் நிறுவனத்தின் தலைவரான பேராசிரியர் Costas N. Papanicolas அவர்கள் தன் குடும்பத்தோடு மே 16, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2022, 17:21