தேடுதல்

பெருவெள்ள பாதிப்பு பெருவெள்ள பாதிப்பு  (AFP or licensors)

பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 280 பில்லியன் டாலர்கள்

தீவிரமான காலநிலை மாற்றத்தின் விளைவாகவே இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. எதிர்காலத்தில் இவைகள் மிகவும் கடுமையானதாக மாறக்கூடும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2021 ஆம் ஆண்டில் உலகளாவிய இயற்கைப் பேரழிவுகள் 280 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், 2017ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட இரண்டாவது பெரிய இழப்பு இது என்றும் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனியை தளமாகக் கொண்ட Munich Re அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிப்பிற்குள்ளான இப்பகுதியின் மொத்த பொருளாதாரச் செலவு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அல்லது உலகளாவிய அளவில்  மொத்தத்தில் வெறும் 18 விழுக்காடு என்றும், ஆனால், ஆசியா-பசிபிக் பகுதியில், 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டது என்றும் இவ்வமைப்புத் தெரிவிக்கின்றது.

மேலும், 2021ம் ஆண்டின் இயற்கைப் பேரழிவுகள் ஆசிய-பசிபிப் பகுதிகளில் காப்பீட்டு இடைவெளியின் பயங்கரத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் Munich Reன் நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் Achim Kassow அவர்கள் மேற்கோள் காட்டிக் கூறினார்.  

ஆசியாவின் மிகப்பெரும் பேரழிவு ஜூலை மாதம் சீனப் பகுதியான ஹெனானில் ஏற்பட்ட வெள்ளம்தான் என்று கூறும் Munich Re அமைப்பு, இதனால் 300 நபர்கள் இறந்ததுடன் 50 பேர் காணாமல்போயுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் அதிகாரபூர்வமாக தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும், இப்பகுதியில் சொத்து மற்றும் விவசாய இழப்புகள் 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது என்றும்,  ஆனால்,  10 விழுக்காடு  மட்டுமே காப்பீட்டின் கீழ் உள்ளது என்றும், Munich Re அமைப்பு குறிப்பிடுகிறது.

2021 பேரிடர் புள்ளிவிவரங்களின்படி, தீவிர காலநிலை மாற்றத்தின் விளைவாகவே இவைகள் நிகழ்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவைகள் மிகவும் கடுமையானதாக  மாறக்கூடும்" என்றும்  Munich Re அமைப்பில் உள்ள காலநிலை தீர்வுகள் பிரிவின் தலைவர் Ernst Rauch  அவர்கள் கூறினார்.  (Asia news)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2022, 17:05