தேடுதல்

ஸ்ரீநகரின் தால் ஏரி ஸ்ரீநகரின் தால் ஏரி  (© 2011 Dragon Studio. All Rights Reserved.)

இனியது இயற்கை - ஸ்ரீநகரின் தால் ஏரி

சுற்றுலா மற்றும், பொழுதுபோக்கு மையமாக விளங்கும் தால் ஏரி, காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல், அல்லது ஸ்ரீநகரின் வைரக்கல் என அழைக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது தால் ஏரி. கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த இயற்கையின் கொடை, எப்போதும் நீர் நிறைந்து காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள இந்த ஏரி, இந்தியாவின் கோடை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் இந்த ஏரி, காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல், அல்லது ஸ்ரீநகரின் வைரக்கல் என அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஏரி மீன்பிடித்தல் போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த இமாலய நகர்ப்புற ஏரி, மூன்று பக்கங்களிலும் பனி மூடிய மலைகளைக் கொண்டதாக உள்ளது. 15 கிலோ மீட்டர் நீண்ட ஏரிக்கரையில் வரிசையாகப் பசுமையான தோட்டங்கள் உள்ளன. இந்த கவர்ச்சிகரமான பூங்கா கட்டப்பட்டது, முகலாயர் காலத்தில் என்று கூறுகின்றனர். நிறைய தாமரை மலர்களைக் கொண்டுள்ள தால் ஏரியில், மிதக்கும் படகு வீடுகளும் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2022, 14:53