தேடுதல்

வெண்ணந்தூர் ஏரி வெண்ணந்தூர் ஏரி 

இனியது இயற்கை: வெண்ணந்தூர் ஏரி

வெண்ணந்தூர் ஏரிக்கு திருமணிமுத்தாறு ஆற்றிலிருந்து நீர் வருகிறது. திருமணிமுத்தாறு, சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் ஓர் ஆறாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

வெண்ணந்தூர் ஏரி, தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் நகருக்கு அருகில் அந்நகரின் மேற்கே அமைந்துள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு கிழக்கு-மேற்கே அதிகமாகவும், வடக்கு-தெற்கே குறைவாகவும் உள்ளது. அதன் வடக்கு, கிழக்கு, மற்றும், தெற்கு கரைகள் வெண்ணந்தூரிலும், மேற்குக் கரை நாச்சிபட்டியிலும் அமைந்துள்ளன. வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு, இந்த ஏரி நீர்வள ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு திருமணிமுத்தாறு ஆற்றிலிருந்து நீர் வருகிறது. திருமணிமுத்தாறு, சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி சேலம் மாநகர், மற்றும், நாமக்கல் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் ஓர் ஆறாகும். போதமலையின் தெற்குச் சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் ஆறும், கஞ்சமலையின் சிற்றோடையான பவுனாறு அல்லது தங்க ஆறும் திருமணிமுத்தாற்றின் துணை ஆறுகளாகும். பல ஏரிகளை நிரம்பச் செய்து தடுப்பணைகளை எல்லாம் கடந்து ஏறக்குறைய 120 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துவந்தபிறகு, நாமக்கல் மாவட்டத்தில் நன்செய் இடையார் என்னும் இடத்தில் காவிரியில் கலக்கிறது. மேலும், ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூர் பகுதியிலுள்ள சோமூர் ஏரி, 360 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆண்டுதோறும் பெய்யும் மழையால் இந்த ஏரிக்கு அளவிற்கு மேல் மழைநீர் வருகிறது. ஏரியின் கொள்ளளவிற்கு ஏற்ப அந்தப் பகுதியில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது (நன்றி: இணையதளங்கள்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2022, 11:23