தேடுதல்

உக்ரைன் பள்ளி ஒன்றில் குழந்தைகள் உக்ரைன் பள்ளி ஒன்றில் குழந்தைகள்   (ANSA)

உக்ரைனில் 40 இலட்சம் குழந்தைகளுக்கு கல்வி தடைபடுகிறது!

உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் குழந்தைகளில் பாதி பேர் அதாவது, ஏறக்குறைய 10 இலட்சம் குழந்தைகள் தற்போது அவர்கள் நடத்தும் நாடுகளில் உள்ள பள்ளிகளில் சேரவில்லை என்றும் கூறுகிறது யுனிசெப்பின் அவ்வறிக்கை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 40 இலட்சம் குழந்தைகளுக்குக் கல்வி தொடர்ந்து தடைபடுகிறது என்ற தனது கவலையை அறிக்கையொன்றில் வெளிப்படுத்தியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.

ஜூன் 12, இப்புதனன்று, இந்தத் தகவலை அவ்வறிக்கையில் வழங்கியுள்ள யுனிசெப் நிறுவனம், ஏறக்குறைய 6,00,000 பள்ளி வயது குழந்தைகள் ஆரம்ப கற்றலை முழுமையாக அணுக முடியாத நிலையில் உள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில், உக்ரேனிய குழந்தைகள் படிப்பதில் இரண்டு ஆண்டுகள் பின்தங்கியிருந்தனர் என்று கூறும் அவ்வறிக்கை, கணிதத்தில் ஓர் ஆண்டு பின்தங்கியிருந்தனர் மற்றும் அறிவியலில் 6 மாதங்கள் பின்தங்கியிருந்தனர் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளி வசதிகள் இப்போரினால் சேதமடைந்துள்ளன என்றும், வெடிகுண்டுகள் வீசப்படலாம் என்ற அச்சத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வராததால், ஐந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை மூட வேண்டியிருந்தது என்றும் உரைக்கிறது அவ்வறிக்கை.

உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் குழந்தைகளில் பாதி பேர் அதாவது, ஏறக்குறைய 10 இலட்சம் குழந்தைகள் தற்போது அவர்கள் நடத்தும் நாடுகளில் உள்ள பள்ளிகளில் சேரவில்லை என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2024, 15:14