காங்கோ தலத் திருஅவை காங்கோ தலத் திருஅவை  (AFP or licensors)

காங்கோவின் அமைதி வாழ்வுக்கு கிறிஸ்தவ சபைகள் அழைப்பு

மக்களிலும், சமூக பொருளாதார நிலைகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எந்தவொரு நிலைகள் குறித்தும் கிறிஸ்தவர்கள் பாராமுகமாக இருக்கமுடியாது என்கிறது காங்கோ திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2025ஆம் ஆண்டை அமைதி மற்றும் இணக்க வாழ்வின் ஆண்டாக கருதி காங்கோ ஜனநாயக குடியரசின் மக்களும், பெரும் ஏரியைச் சுற்றியுள்ள நாடுகளின் மக்களும் ஒற்றுமையில் வாழ காங்கோ கிறிஸ்தவ சபைகள் இணைந்து அழைப்புவிடுத்துள்ளன.

துன்பங்களும் மரணங்களும் கற்பழிப்புகளும் மக்கள் குடிபெயர்வுகளும் அழிவுகளும் இப்படியேத் தொடர்ந்துகொண்டிருக்க முடியாது என்ற அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டான்டு கிறிஸ்தவ சபைகள், மனித குல நெருக்கடியின் அளவிடமுடியாத பாதிப்புக்களைக் குறித்து தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொருவரும் ஒருமைப்பாட்டுணர்வில் அமைதியான இணக்கவாழ்வைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ள காங்கோவின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகள், அரசியல் மற்றும் ஆயுதம் தாங்கிய மோதல்கள் குறித்து நாம் மௌனம் காக்க முடியாது எனவும், மக்களிலும் சமூக பொருளாதார நிலைகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எந்தவொரு நிலைகள் குறித்தும் நாம் பாராமுகமாக இருக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜனவரி 2025, 15:59