தடம் தந்த தகைமை - உலகம் முழுவதையும் தமதாக்கினாலும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (லூக் 9:25) என கேள்வி கேட்டார் இயேசு.
நாம் வாழும் பூமி ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய 1674 கி.மீ. அளவுக்குச் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். இந்த வேகத்தில் நாமும் சுழன்று கொண்டேதான் இருக்கின்றோம். ஆனால் FRAMES OF REFERENCE (குறிப்பாயம்) எனப்படும். குறியீட்டுச் சட்டகத்தின் அடிப்படையில் நாம் இதனை உணர்வதில்லை. அவ்வாறு சுழலும் பூமி வேகத்திற்கேற்ப மனிதரும் ஓடி பட்டம், பதவி, புகழ், பணம், நிலம், பொருள், உறவு, மகிழ்ச்சி எனத் தேடிக் கொள்கின்றனர். இவை எல்லாம் கிடைத்தும் பூமியில் ‘வாழாது’ செல்லும் மனிதர்களே ஏராளம். ஏனெனில் அவர்கள் தங்களுக்கென மட்டும் வாழ்ந்தவர்கள். பிறருக்காக வாழாத வாழ்வு ஒரு வாழ்க்கையே அல்ல. எல்லாம் பெற்றும் எதுவும் பகிராமல் வாழ்வதை விட ஏதும் பெறாமல் வாழ்வதே நல்லது.
நம்மிடையே அபகரிப்பு, ஏமாற்று, கொள்ளை, கடத்தல், தாக்குதல், பதுக்கல், விலை உயர்வு, அச்சுறுத்தல், போர் என்பவையெல்லாம் தொடர் நிகழ்வுகளாயுள்ளன. எதற்கு எனக் கேட்டால் ‘வாழ’ எனப் பதில் வரும். இவை வாழ்வைத் தருமா?
வாழ்வதற்கான செலவு மிகக் குறைவு. அடுத்தவரைப்போல வாழத்தான் செலவு மிக அதிகம்.
இறைவா! எல்லாம் பெற்று வாழாமல் போவதைவிட எதுவும் பெறாமல் வரலாற்றில் வாழ வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்