பாதிக்கப்பட்ட மியான்மார் பகுதி பாதிக்கப்பட்ட மியான்மார் பகுதி   (AFP or licensors)

உதவிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விண்ணப்பிக்கும் மியான்மார் திருஅவை

மியான்மாரில் கட்டுமானப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, மாறாக உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மார்ச் மாதத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், புதிய திருத்தந்தையின் தேர்வு தங்களுக்கு பெரு மகிழ்ச்சியைத் தந்ததாக மியான்மார் தலத்திருஅவை அறிவித்துள்ளது.

புதிய திருத்தந்தையாக 14ஆம் லியோ அவர்கள் தேர்வுச் செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட மியான்மார் திருஅவைத் தலைவர்கள், இஸ்லாமியர், புத்த மதத்தினர், பிற கிறிஸ்தவ சபையினர் என அனைவரும் திருத்தந்தையின் தேர்வு குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், மியான்மாரின் அமைதிக்கு அவர் ஊக்கமளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அறிவித்தனர். 

மார்ச் மாதம் 28ஆம் தேதி இடம்பெற்ற நில அதிர்ச்சியின் பேரிழப்புக்கள், தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டு பதட்ட நிலைகள் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மியான்மார் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவி, ஒருமைப்பாடு மற்றும் ஆதரவு தேவைப்படுவதாக தலத்திருஅவை விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

கட்டுமானப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, மாறாக உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது என்றார் மண்டலாய் குருகுல முதல்வர் அருள்பணி பீட்டர் கீ முவாங்.

இதற்கிடையே மண்டலாய் மறைமாவட்டத்தின் அவசரகால இடர்துடைப்பு அமைப்பு, பாதிக்கப்பட்ட கோவில்கள், மேய்ப்புப்பணி மையங்கள், மறைக்கல்வி வகுப்பறைகள், சமூக மையங்கள் போன்றவைகள் குறித்து கணக்கெடுத்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2025, 15:32