பிலிப்பீன்சில் வாக்குப்பதிவு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் பிலிப்பீன்சில் வாக்குப்பதிவு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம்  (AFP or licensors)

தேர்தல் முறைகேடுகள் குறித்து பிலிப்பீன்ஸ் திருஅவை கவலை

பிலிப்பீன்ஸ் திருஅவை : அண்மை வாக்குப்பதிவு இரத்தத்தாலும், பணத்தாலும், பொய்களாலும் பெரிய அளவில் கறைபடுத்தப்பட்டுள்ளது. வெல்வதும் தோல்வியுறுவதும், ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிலிப்பீன்ஸ் நாட்டில் இவ்வாரம் திங்களன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வன்முறை, வாக்குக்கு பணம் கொடுத்தல், கள்ள ஓட்டுகள் போன்றவை குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள், நடவடிக்கையாளர்கள் ஆகியோருடன் இணந்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் தலத்திருஅவை அதிகாரிகள்.

மக்கள் தங்கள் தீர்ப்பை எழுதியுள்ளனர், ஆனால் அது சரியான முறையில் எழுதப்படவில்லை என்ற பிலிப்பீன்சின் Lingayen-Dagupan பேராயர் Socrates Villegas அவர்கள், இந்த வாக்குப்பதிவு இரத்தத்தாலும், பணத்தாலும், பொய்களாலும் பெரிய அளவில் கறைபடுத்தப்பட்டுள்ளது என உரைத்தார்.

அண்மையில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலின் முறைகேடுகளை நோக்கும்போது, அரசு இன்னும் நிறைய திருத்த வேண்டியுள்ளது என்ற பேராயர், வெல்வதும் தோல்வியுறுவதும், ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமேயொழிய அளவற்ற மகிழ்ச்சியிலும் துயரத்திலும் நம்மை மூழ்கடிக்கக் கூடாது என உரைத்தார்.

இதற்கிடையே, அண்மை தேர்தல் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, மே 18ல் இடம்பெற்ற தேர்தலில் 48 வன்முறை நிகழ்வுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2019ல் இடம்பெற்ற தேர்தலின் 128 வன்முறை நிகழ்வுகளை விடவும், 2020ஆம் ஆண்டின் 120 நிகழ்வுகளைவிடவும் குறைவே எனவும் தெரிவித்தார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2025, 16:26