தடம் தந்த தகைமை : அரசர் நெபுகத்னேசரின் இரண்டாம் கனவு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நெபுகத்னேசராகிய நான் வீட்டில் மன அமைதியுடனும் அரண்மனையில் வளமுடனும் வாழ்ந்து வந்தேன். நான் ஒரு கனவு கண்டேன்; அது என்னை அச்சுறுத்தியது; நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய கற்பனைகளும் காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன. ஆதலால் நான் கண்ட கனவின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறும்படி பாபிலோனிய ஞானிகள் அனைவரையும் என் முன்னிலைக்கு அழைத்துவரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தேன். அவ்வாறே, மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரரும் கல்தேயரும் சோதிடரும் வந்து கூடினர்; நான் கண்ட கனவை அவர்களிடம் கூறினேன்; ஆனால் அவர்களால் அதன் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறமுடியவில்லை. இறுதியாக, என் சொந்தத் தெய்வமாகிய பெல்தசாச்சாரின் பெயர் சூட்டப்பெற்ற தானியேல் வந்தார்; அவர் புனிதமிகு கடவுளின் ஆவியால் நிரப்பப்பெற்றவர்; அவரிடம் நான் கண்ட கனவைக் கூறினேன்: “மந்திரவாதிகளின் தலைவராகிய பெல்தசாச்சார்! புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும், உம்மால் விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன். நான் கனவில் கண்ட காட்சி இதுதான்; அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர்.
நான் படுக்கையில் கிடந்தபோது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன: ‘இதோ! நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்; அது மிக உயர்ந்து நின்றது. அது வளர்ந்து வலிமை மிக்கதாய், வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம். அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன; மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன; அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது; அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன; அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்