மனித மாண்பை மீட்டெடுக்கும் கடவுளின் இரக்கப்பார்வை
மெரினா ராஜ் – வத்திக்கான்
குழப்பத்தின் மத்தியில், கடவுளின் இரக்கமுள்ள பார்வை மனிதனின் மாண்பை மீட்டெடுக்கிறது என்றும், மீட்பின் நம்பிக்கையை உருவாக்கும் புதிய ஆடையை மனித உள்ளத்திற்குள் நெய்கிறது என்றும் வத்திக்கான் செய்திகளுக்கு எடுத்துரைத்தார் அருள்சகோதரி Maria Marthe Placius.
ஹெய்ட்டியில் உள்ள அருள்சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை துன்புறும் மக்களின் நலவாழ்வு, கல்வி மற்றும் உளவியல் ஆதரவுக்காக அர்ப்பணிக்கின்றனர் என்றும், மக்களுக்குத் தாங்கள் ஆற்றும் உதவி சிறியதாக இருந்தாலும், கடவுளால் அதனை பலமடங்கு இரட்டிப்பாக்கி, துன்பத்தை நம்பிக்கையாகவும் அற்புதங்களாகவும் மாற்ற முடியும் என்றும் கூறினார் அருள்சகோதரி Maria Marthe Placius,.
மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழும் ஹெய்ட்டி மக்களுக்கு நம்பிக்கையின் அரவணைப்பாக அருள்சகோதரிகள் இருந்து வருகின்றனர் என்றும், தீவிர வறுமை, இயற்கை பேரழிவுகள், வன்முறை, நாடுகடத்தல்கள், நலவாழ்வு நெருக்கடி போன்ற ஆழமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்குத் துணிவுடன் பணியாற்று வருகின்றனர் என்றும் எடுத்துரைத்தார் அருள்சகோதரி மார்த்தா.
இறப்பு, மனித வர்த்தகம் போன்றவை நிறைந்த ஹெய்ட்டி பகுதியில் பணியாற்றிவரும் காணிக்கை அன்னை பிறரன்பு சபை தொமினிக்கன் அருள்சகோதரிகள் தங்களது பணியினால் மக்களின் வாழ்வை உயிருள்ளதாக வைத்திருக்கிறார்கள் என்றும், தேவையில் இருக்கும் மக்களுக்காக உதவும் போராட்டத்தில் வாழ்ந்து இறப்ப்தே தங்களது கடமை என்றும் எடுத்துரைத்தார் அருள்சகோதரி மார்த்தா.
எல்லா மக்களுக்கும் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு செல்வதே தங்களது மறைப்பணியின் மிக முக்கியமான நோக்கம் என்று கூறிய அருள்சகோதரி மார்த்தா அவர்கள், மருத்துவ பராமரிப்பு, கல்வி, உளவியல் ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அவசரம் ஹெய்ட்டியில் தற்போது அதிகரித்து வருகிறது என்றும் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்