circo massimo விவசாயிகள் சந்தையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் circo massimo விவசாயிகள் சந்தையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றோர்  

படைப்பு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கொடை

பல நூற்றாண்டுகள் பழமையான விதை மரபுகளை நம்பியுள்ள விவசாயிகள், காலப்போக்கில் தங்கள் காலநிலை மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு மாறி, உயிர்வாழ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கோரும் காப்புரிமை பெற்ற விதைகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவா உமக்கே புகழ் சுற்றுமடலானது, படைப்பு என்பது சுரண்டப்பட வேண்டிய ஒரு வளமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கொடை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், "விவசாயிகள், சமூகங்கள் மற்றும் முடிவெடுப்பவர்களை இணைத்தல், அவர்களின் குரல்களைக் கேட்க வைத்தல் போன்றவற்றிற்கு திருஅவைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்றும் கூறினார் இம்மானுவேல் யாப்.

ஜூன் 26 ஆம் தேதி, இத்தாலியின் காம்பாக்னா அமிகா அவர்களால் இணைந்து உரோமின் சிர்கோ மாசிமோ விவசாயிகள் சந்தையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விவசாய அமைச்சர்கள் சிவில் சமூக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் தலத்திருஅவைப் பிரதிநிதிகள் ஒன்று கூடினர் இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்,  கத்தோலிக்க சமூக நீதி அமைப்புகளின் உலகளாவிய வலையமைப்பான CIDSE இன் உணவு மற்றும் நிலக் கொள்கை அதிகாரி இம்மானுவேல் யாப்.

விவசாயிகள் தங்கள் விதைகளைச் சேமிக்க, பரிமாறிக்கொள்ள மற்றும் விற்க உரிமைகள் - ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் - பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்களால் அரிக்கப்படுகின்றன என்று பகிர்ந்துகொண்டார் இம்மானுவேல் யாப்,

பிலிப்பீன்ஸைச் சேர்ந்த யாப், தனது சொந்த நாட்டில் விவசாயிகளுடன் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதிக மகசூல் தரும் அரிசி வகைகள் மூலம் அற்புதங்களை உறுதியளித்த பசுமைப் புரட்சியை நினைவு கூர்ந்தார்.

"வேளாண் சூழலியல் என்பது ஒரு கோட்பாடு அல்ல, அது ஒரு உண்மை. பிலிப்பீன்ஸில், விவசாயிகள் இரசாயனங்கள் இல்லாமல் செழித்து வளரும் அரிசி வகைகளை இனப்பெருக்கம் செய்கிறார்கள். அதன் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் நிலையானது மற்றும் அது நிலத்தை மதிக்கிறது என்றும் எடுத்துரைத்தார் யாப்.

விவசாயிகளுக்கான சட்டங்கள் பல ஆப்பிரிக்க நாடுகளுடனான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்கள் வழியாகத் தள்ளப்படுகின்றன என்றும், அவை பல்லுயிரியலை சீரான தன்மையுடன் மாற்றுவதற்கு அச்சுறுத்துகின்றன என்றும் விளக்கினார் யாப்.    

பல நூற்றாண்டுகள் பழமையான விதை மரபுகளை நம்பியுள்ள விவசாயிகள், காலப்போக்கில் தங்கள் காலநிலை மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு மாறி, உயிர்வாழ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கோரும் காப்புரிமை பெற்ற விதைகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று எடுத்துரைத்த யாப் அவர்கள், அதனை ஒரு விவசாயி அவற்றை வாங்கியவுடன், அவர்களால் சட்டப்பூர்வமாக சேமிக்கவோ அல்லது மீண்டும் நடவு செய்யவோ முடியாது, அவர்கள் ஒவ்வொரு பருவத்திலும் மீண்டும் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றும் கூறினார் யாப்.

இந்த விதைச் சட்டங்களை பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களின் கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது என்றும், பெரும்பாலும் ஐரோப்பிய சந்தைகளுக்கான அணுகல், நிதி உதவி, விவசாய முதலீட்டின் வாக்குறுதிகள் ஆகியவை உணவுப் பாதுகாப்பை அதிகரித்தல், விவசாயத்தை நவீனமயமாக்குதல் போன்றவற்றிற்கான முயற்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் பகிர்ந்துகொண்டார் யாப்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூலை 2025, 15:11