இந்தோனேசிய ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புபடம் 4/9/24) இந்தோனேசிய ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புபடம் 4/9/24)  (ANSA)

இந்தோனேசிய மறைப்பணி சங்கங்களின் அடையாளம் மற்றும் பணி

இந்தோனேசிய ஆயர் பேரவையின் மறைப்பணி ஆணையத்தின் தலைவர் ஆயர் அலோசியஸ் சுத்ரிஸ்நாத்மகா அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் இந்நிகழ்வானது ஆரம்பமானது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இந்தோனேசியாவில் உள்ள திருப்பீட மறைப்பணி சங்கங்களின் (பிஎம்எஸ்) மறைமாவட்ட இயக்குநர்களின் பொதுப்பேரவையில் முப்பத்தெட்டு மறைமாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 4 முதல் 7 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தா மறைமாவட்டத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வர இருக்கின்ற உலக மறைப்பணி நாளானது “மக்களின் மத்தியில் எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட இருப்பதாக எடுத்துரைத்த்துள்ள அச்செய்தி நிறுவனம்.

மறைமாவட்டங்களின் மறைப்பணி இயக்கவியல் தொடர்பாக அடையாளத்தை உருவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் மறுபரிசீலனை செய்தல் ஆகியவை இக்கூட்டத்தின் முக்கியமானக் கருத்தாக இருந்தன என்றும், இந்தோனேசிய ஆயர் பேரவையின் மறைப்பணி ஆணையத்தின் தலைவர் ஆயர் அலோசியஸ் சுத்ரிஸ்நாத்மகா எம்எஸ்எஃப் தலைமையில் திருப்பலியுடன் இந்நிகழ்வானது ஆரம்பமானது என்றும் தெரிவித்துள்ளது அச்செய்தி.

நிகழ்வில், இந்த ஆண்டு உலக மறைப்பணி தினத்தின் செய்தியில், மறைப்பணியின் வரலாற்று வேர்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையில் கவனம் செலுத்தவேண்டும் என்றும், மறைப்பணி ஆன்மிகத்தின் பராமரிப்பு, பரிமாற்றம் மற்றும் உலகளாவிய திருஅவையின் மறைப்பணியில் விசுவாசிகளின் ஈடுபாட்டை POM இன் அத்தியாவசிய அர்ப்பணிப்பு உள்ளது என்றும் எடுத்துக்காட்டினார் திருப்பீட மறைப்பணி யூனியனின் (PUM) பொதுச் செயலாளர் அருள்பணி. டின் அன் நுவே,.

கூட்டத்தின் இரண்டாவது நாளில், 10 மறைமாவட்டங்களால், "சிறந்த நடைமுறைகளாக பகிர்ந்துகொள்ளப்பட்டவைகளான, குழந்தைகளுக்கான நிதி திரட்டல், பலிபீட பணியாளர்களின் மறைமாவட்டக் கூட்டம், குழந்தைகள் மற்றும் இளம் மறைப்பணியாளர்களுக்கான நம்பிக்கை உருவாக்கும் திட்டம், மறைமாவட்ட ஆணையங்கள் மற்றும் மேய்ப்பு மையங்கள் தொடர்பாக POM களை மறுசீரமைத்தல்,குருமடங்கள் மற்றும் மறைக்கல்விக்கான பள்ளிகளில் மறைப்பணி உருவாக்கம், திருஅவைகளில் மறைப்பணி உருவாக்குநர்களை ஏற்படுத்துதல், ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஆகஸ்ட் 2025, 13:09