அரசர் சாலமோன் உடன் ஈரான் அபி அரசர் சாலமோன் உடன் ஈரான் அபி 

தடம்தந்த தகைமை – தீரின் மன்னன் சாலமோனுக்கு அனுப்பிய கடிதம்

அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன். அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: “ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். அதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார். விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே ஆண்டவராகிய தமக்கு ஒர் இல்லத்தையும் அரசராகிய உமக்கு ஓர் அரண்மனையையும் கட்டுவதற்கு விவேகமும் அறிவாற்றலுமுடைய ஞானியாம் உம்மைத் தாவீது அரசருக்கு மகனாகத் தந்தருளினார்!

எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன். அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு நூல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்; அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்; உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன். எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும். நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோனில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யோப்பா வரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்.” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஆகஸ்ட் 2025, 08:25