தடம் தந்த தகைமை – சேபா அரசி சாலமோன் அரசருக்கு அளித்த பரிசு
மெரினா ராஜ் – வத்திக்கான்
பின்பு, அவர் அரசரிடம் நூற்றிருபது தாலந்து பொன், மிகுதியான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அளித்தார். சேபாவின் அரசி அரசர் சாலமோனுக்கு அளித்த நறுமணப் பொருள்களைப் போன்று பிறகு என்றுமே அவருக்குக் கிடைக்கவில்லை ஓபீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்திருந்த ஈராமின் பணியாளரும் சாலமேனின் பணியாளரும் நறுமண மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தனர்.
அரசர் அந்த நறுமண மரங்களால் ஆண்டவர் இல்லத்திற்கும் அரச அரண்மனைக்கும் தேவையான படிக்கட்டுகளையும், பாடகர்களுக்கு சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக்கருவிகளையும் செய்தார். யூதா நாட்டில் அத்தகையவை அதற்குமுன் இருந்ததில்லை. அரசர் சாலமோன் சேபாவின் அரசி விரும்பிக் கேட்டவை எல்லாவற்றையும் அவர் அரசருக்குக் கொண்டு வந்ததைவிட, மிகுதியாகவே அளித்தார். பின்பு, அவர் தம் அலுவலருடன் தமது நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்