எழில் மிளிரும் இயற்கை எழில் மிளிரும் இயற்கை  (AFP or licensors)

பல்சுவை - நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் – இறைவா உமக்கே புகழ் பகுதி - 1

2015 -ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் வழியாக மாறி வரும் காலநிலைச்சூழல்களால் மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கிணங்க நாம் வாழும் இந்த சுற்றுச்சூழலை மதித்து வாழ்வோம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2015ஆம் ஆண்டு படைக்கப்பட்ட இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலானது நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் எதிர்காலத்தை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலைப் புதுப்பிக்க நம்மை அழைக்கிறது. நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பின்தொடர்வதில் நாம் ஒன்றுபட்டு, கடவுளால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான வீட்டைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டு, எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலைப் புதுப்பிக்க அழைக்கிறது இத்திருமடல். நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் என்னும் தலைப்பில் கடந்த வாரம் நம்பிக்கையின் ஒளி என்னும் திருமடல் குறித்தக் கருத்துக்களைப் பற்றி அறிந்துகொண்ட நாம் இன்று இறைவா உமக்கே புகழ் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடல் குறித்த கருத்துக்களை நமது பல்சுவையில் நாம் காண இருக்கின்றோம்.

இறைவா உமக்கே புகழ் பகுதி - 1

2015 -ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் வழியாக மாறி வரும் காலநிலைச்சூழல்களால் மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கிணங்க நாம் வாழும் இந்த சுற்றுச்சூழலை மதித்து வாழ்வோம். மனித வாழ்வானது கடவுள், அயலார், உலகம் என்ற மூன்று தொடர்புகள் வழியே இயங்கவேண்டும் என்னும் மூன்று கருத்துக்களை அதிகமாக உள்ளடக்கிய சுற்றுமடலாக திகழும் இறைவா உமக்கே புகழ் என்னும் திருமடலின் வழியே வாழ முன்வருவோம். இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் வெளிவந்ததன் பத்தாம் ஆண்டினை நினைவுகூரும் இந்த யூபிலி 2025ஆம் ஆண்டில் நாமு இயற்கையைப் பேணிக்காப்பவர்களாக வாழ நம்மை வலியுறுத்தும் அருள்முனைவர் கசி இராயப்பா அவர்களின் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

இறைவா உமக்கே புகழ் என்ற சுற்றுமடல் குறித்த தந்தை அவர்களின் கருத்துக்களை இரண்டாம் பாகமாக வரும் வாரத்தில் நாம் காணலாம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 செப்டம்பர் 2025, 09:06