அன்னை மரியா ஆன்மிகத்தாருக்கான யூபிலியின் போது திருத்தந்தை அன்னை மரியா ஆன்மிகத்தாருக்கான யூபிலியின் போது திருத்தந்தை   (AFP or licensors)

நேர்காணல் – அன்னை மரியா ஆன்மிகத்தாருக்கான யூபிலி

மரியாவின் ஆன்மிகமான இறைப் பணிவு, தாழ்ச்சி, செயல்பாட்டுமேல் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகியவை சாதாரண மக்களின் மனவெளிப்பாட்டைக் குறித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே அது கவர்ச்சியுடையதாக மாறுகிறது. இது அறிஞர்களுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து வைக்கப்பட்ட இறைஞானமாகக் காட்சி தருகிறது.
அருள்தந்தை அந்தோணி பெனடிக்ட்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்னை மரியா கொண்டிருந்த ஆன்மிக வாழ்வை, தங்களது வாழ்வில் செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மரியன்னை ஆன்மிகத்தார். இறைவனில் ஊன்றிய வாழ்க்கை நெறியை கடந்து மக்கள் பல தலைமுறையாக செபமாலை, நவநாள், திருப்பயணம், நோன்பு, அன்னை மரியா காட்சிகளின் செய்திகளைப் பரப்புதல் ஆகிய வழிமுறைகளில் பின்பற்றி வருகின்றனர். மரியா பக்தி முயற்சியை நாம் வெளிப்படையாகக் காண இயல்கிறது. ஆனால் மரியா ஆன்மிகத்தை வெளிப்படையாகக் காண இயல்வதில்லை. வெளிப்படையாகக் காணப்படும் உணர்ச்சிமிக்க பல்வேறு பக்தி முயற்சிகளின் உள்சக்தியாகச் செயல்படுவது மரியா ஆன்மிகமே. திருஅவையின் வரலாற்றில் எழுந்துள்ள பிற ஆன்மிகங்கள் பொதுவாக சிறப்பு நிலையினரான துறவிகளுக்கும், குருக்களுக்கும் உரியது போன்று இருக்க, மரியா ஆன்மிகம் மட்டுமே ஒரு வெகுஜன ஆன்மீகமாக, மக்கள் ஆன்மிகமாக மாறியிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. மரியாவின் ஆன்மிகமான இறைப் பணிவு, தாழ்ச்சி, செயல்பாட்டுமேல் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகியவை சாதாரண மக்களின் மனவெளிப்பாட்டைக் குறித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே அது கவர்ச்சியுடையதாக மாறுகிறது. இது அறிஞர்களுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து வைக்கப்பட்ட இறைஞானமாகக் காட்சி தருகிறது.

அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாள்களில் மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலியானது கொண்டாடப்பட்டது. அவ்வகையில் இன்று மரியன்னை ஆன்மிகம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை அந்தோணி பெனடிக்ட். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 அக்டோபர் 2025, 18:51