திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – மறைபரப்புப் பணியாளர்களுக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
வத்திக்கானில் அக்டோபர் 4 சனிக்கிழமை மற்றும் 5 ஞாயிறு ஆகிய நாள்களில் மறைபரப்புப் பணியாளர்களுக்கான யூபிலியானது கொண்டாடப்படுகின்றது. சனிக்கிழமை காலை 10, மணியளவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கும் யூபிலி ஆண்டு சிறப்பு மறைக்கல்வி உரையில் பங்கேற்கும் மறைப்பணியாளர்கள் நண்பகலில் புனித கதவு வழியாக நுழைந்து இறை ஆசீர் பெற உள்ளனர்.
அக்டோபர் 5, ஞாயிறன்று உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் நடைபெறும் மறைப்பணியாளர்களுக்கான யூபிலி திருப்பலியில் பங்கேற்க உள்ளனர். நண்பகலில் மக்களிடையே புலம்பெயர்ந்தோர் மற்றும் எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக என்ற தலைப்பில் மக்கள் தினமானது காஸ்தல் சாந்தா ஆஞ்சலோ தோட்டத்தில் சிறப்பிக்க இருக்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்