திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – துறவறத்தாருக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
வத்திக்கானில் அக்டோபர் 8, புதன்கிழமை மற்றும் 9, வியாழன் ஆகிய நாள்களில் துறவறத்தாருக்கான யூபிலியானது கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமை காலை 10, மணியளவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கும் புதன் மறைக்கல்வி உரையில் பங்கேற்கும் துறவறத்தார் நண்பகலில் புனித கதவு வழியாக நுழைந்து இறை ஆசீர் பெற உள்ளனர். மாலையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் துறவறத்தாருக்கான முன் தயாரிப்பு செப வழிபாட்டில் கலந்துகொள்ள இருக்கின்றனர் துறவறத்தார்.
அக்டோபர் 9, வியாழன் உரோம் உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் நடைபெறும் துறவறத்தாருக்கான யூபிலி திருப்பலியில் பங்கேற்க உள்ளனர். நண்பகலில் துறவற வாழ்க்கைக்கான திருப்பீடத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, கலாச்சார, கலை மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் குறித்த உரோம் நகரத்துடனான உரையாடல் நிகழ்வானது, Piazza dei Mirti, Piazza Don Bosco, Piazza Vittorio Emanuele போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்