திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – சிறைக்கைதிகளுக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை சிறைக்கைதிகளுக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.
டிசம்பர் 12, வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் வத்திக்கான் வானோலியின் திருத்தந்தை பிரான்சிஸ் மற்று சிறைக்கைதிகளின் உலகம் இரண்டிற்கும் இடையிலான உறவு என்ற தலைப்பில் இடம்பெறும் நிகழ்வுடன் இந்த யூபிலியானது ஆரம்பமாக உள்ளது. அதன்பின் பேராயர் Gian Franco Saba அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற உள்ளது.
டிசம்பர் 13, சனிக்கிழமை, காலை 9:00 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை சிறைச்சாலை நிர்வாகத் துறைத் தலைவர் மருத்துவர் ஸ்தேஃபனோ கார்மன் டி மைக்கேலின் வரவேற்புரையும் கருத்துகளும் இடம்பெறும். உரோமின் டிராஸ்தேரே புனித அன்னை மரியா பங்கு ஆலயத்தின் தந்தை அருள்பணியாளர் மார்கோ க்னாவி தலைமையில் அமைதிக்கான செபமும் சாட்சியப் பகிர்வுகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் மற்றும் சிறைக்கைதியிடமிருந்து மறுசீரமைப்பு நீதி குறித்த சாட்சியமும் பகிரப்படும். பிற்பகல் 3:30 மணிமுதல் மாலை 5:00 மணிவரை திருநற்கருணை ஆராதனை நடைபெறும்.
டிசம்பர் 14, ஞாயிறன்று காலை 8.30 மணிமுதல் புனிதக் கதவு வழியாக பெருங்கோவிலுக்குள் செல்லும் பவனியும், அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடைபெறும். இத்துடன் 2025 ஆம் ஆண்டிற்கான யூபிலி நிகழ்வுகள் முடிவடைகின்றன. 2026ஆம் ஆண்டு ஜனவரி 6 திருக்காட்சிப் பெருவிழாவன்று இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டானது நிறைவிற்கு வர இருக்கின்றது. அன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவானது சிறப்பு வழிபாட்டுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் மூடப்படும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்