திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – பாடகர்கள் மற்றும் பாடகர் குழுவினருக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
நவம்பர் 22 23 ஆகிய நாள்களில் பாடகர்கள் மற்றும் பாடகர் குழுவினருக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.
நவம்பர் 22 சனிக்கிழமை,- பிற்பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை புனித கதவு வழியாக திருப்பயணிகளாக செல்லும் பாடகர்கள், மாலை 5:00-7:30 மணி வரை உரோமின் ஆலயங்கள் மற்றும் தலத்திருஅவைகளில் மாலை திருப்பலிகளிலும் அதன் பின் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவர்.
நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை,- காலை 10:30 மணி வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாடகர் குழுவினருக்கான யூபிலி திருப்பலியினை தலைமையேற்று வழிநடத்துவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்