லூர்து அன்னை லூர்து அன்னை 

அன்னை ஓர் அதிசயம் - சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயம்

1878 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு தனி பங்காக ஆனது. லூர்து அன்னையின் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்த தந்தை தாராஸ் அடிகளார் சேத்துப்பட்டில் இருந்து 2 கி மீ தொலைவில் உள்ள குன்றின் மீது அன்னைக்கு ஒரு சிறிய ஆலயத்தை எழுப்பினார்,

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1858ஆம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் 1858ஆம் ஆண்டு ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியா காட்சி அளித்ததன் அடிப்படையில் லூர்து நகரில் தோன்றிய அன்னை என்பதால் லூர்து அன்னை என்று எல்லாராலும் வணங்கப்படுகின்றார். அன்னை மரியா. இவ்வுலகில் அன்னை மரியா காட்சி அளித்ததன் அடிப்படையில் பல்வேறு ஆலயங்கள் மிகச்சிறப்பாக எழுப்பப்பட்டு அன்னையின் புகழைப் பரப்பி வருகின்றனர் அவர்தம் மக்கள். உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா பிப்ரவரி 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது, லூர்து அன்னைக் காட்சியின் நினைவாக உலகம் முழுவதும் உள்ள ஏறக்குறைய எல்லாக் கத்தோலிக்க ஆலய வளாகங்களிலும் லூர்து அன்னை காட்சி அளித்த குகை வடிவப் பீடமானது அமைக்கப்பட்டுள்ளது. இது, அன்னை மரியா கெபி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

அவ்வகையில் தமிழகத்தில் சிறப்புமிக்க லூர்து அன்னை திருத்தலங்களுள் ஒன்றான சேத்துப்பட்டு தூய லூர்தன்னை திருத்தலம் பற்றி இன்றைய நமது அன்னை ஓர் அதிசயம் என்ற நிகழ்வில் நாம் காணலாம்.

சேத்துப்பட்டு புனித லூர்து அன்னை திருத்தலம் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்முனைவர் ராய் இலாசர். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

அருள்முனைவர் ராய் இலாசர்

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயம்

வட ஆற்காட்டின் அப்போஸ்தலர் தந்தை ஜான் பிரான்சிஸ் தாராஸ் அவர்களின் பொற்கரங்களால் செதுக்கப்பட்டு மே 1896 இறைவனுக்கும் லூர்தன்னைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நூற்றாண்டை கடந்த இத்திருத்தலம் அன்னை மரியாளின் வழியாக இறைவனின் அருட்கொடைகளை மக்களுக்கு பெற்று தரும் புனித தலமாக விளங்கி வருகிறது. பல்லாயிரகணக்கான இறை மக்கள் இத்திருத்தலத்தில் லூர்து அன்னையின் வழியாக இறைவனின் அருளையும் ஆசீரையும் பெற்று செல்கின்றனர் .

தந்தை தாராஸ்

அருள்தந்தை தாராஸ் அடிகளார் 1835 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் . 1859 ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இவர் குருத்துவ பணிக்காக பாண்டிச்சேரிக்கு வந்து வட ஆற்காட்டில் பல்லாயிரம் மக்களுக்கு இறை நற்செய்தி அறிவித்து திருமுழுக்கு வழங்கினார். குறிப்பாக சேத்துபட்டில் கிட்டத்தட்ட 1700 மக்கள் இறைவன் பக்கம் திரும்பி கிறிஸ்தவர்களாக மனம் மாறி திருமுழுக்கு பெற்றனர், 1878 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு தனி பங்காக ஆனது. லூர்து அன்னையின் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்த தந்தை தாராஸ் அடிகளார் சேத்துப்பட்டில் இருந்து 2 கி மீ தொலைவில் உள்ள குன்றின் மீது அன்னைக்கு ஒரு சிறிய ஆலயத்தை எழுப்பினார், அதற்கு முன் அது சாத்தான் மலை என்று அழைக்கப்பட்டது குறிப்பிட தக்கது. அந்த சிற்றாலயம் அன்னையின் புனித பயணிகளுக்கு இடம் பற்றாத காரணத்தால் சேத்துப்பட்டு ஊரின் மத்தியிலே அன்னைக்கு மிக பெரிய பேராலயத்தை எழுப்பி லூர்து அன்னைக்கு அர்ப்பணித்தார்.1896 ஆம் ஆண்டு மே முதல் நாள் இப்பேராலயம் அர்ச்சிக்கப்பட்டது. அவர் இப்பேராலயம் எழுப்பப்பட்ட இன்னல்களும், அவமானங்களும் ஏராளம்! அருட்தந்தை தாராஸ் அடிகளாரின் திரு உடல் ஆலயத்தின் திருபீடத்தருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது , ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில்(30/10/1916) அடிகளாரின் கல்லறை மந்திரிக்கப்பட்டு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

1996 ஆம் ஆண்டு அருட்தந்தை மரிய ஜோசப் அடிகளார், சேத்துப்பட்டு திருத்தல நூற்றாண்டு விழாவை சிறப்பாகவும் இறைவனின் அருள் ஆசீருடன் கொண்டாடி தூய லூர்து அன்னைக்கு பெருமை சேர்த்தார். சேத்துப்பட்டு மாதா மலை உரிமையை மீண்டும் போராடி மீட்டேடுதவரும் இவரே. பல குருக்கள் சேத்துப்பட்டு திருதல வளர்சிக்காக உழைத்திருக்கிறார்கள் , இன்றும் உழைத்து கொண்டிருக்கிறார்கள். திருதல பங்கு தந்தை பேரருட்திரு முனைவர் அ.ஸ்டீபன் அடிகளார் சிறப்பான முறையில் இறைமக்களை ஆன்மிக வழியில் வழி நடத்தி வருகிறார்.

மரிவலம்

மாதந்தோறும் பவுர்ணமி (முழுநிலவு) தினத்தன்று சேத்துப்பட்டு மாதா மலையில் மரிவலம் நடைபெறுகிறது .

வழிபாட்டு நிகழ்வுகள்

மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்பு கூட்டு திருப்பலி மாலை 8 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் மாதா மலையை சுற்றி மரிவலம்

மாலை 9 மணிக்கு சுகம் அளிக்கும் நற்செய்தி வழிபாடு அதிகாலை 3 மணிக்கு நன்றி திருப்பலி

பங்கு ஆலயத்தில் (தினசரி வழிப்பாடுகள் )

ஞாயிறு காலை (6 மற்றும் 8 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி )

மாலை (6.15 மணிக்கு கூட்டு திருப்பலி )

சனி காலை (6 மணிக்கு திருப்பலி )

மாலை (6 மணிக்கு தேர்பவனி மற்றும் திருப்பலி )

வெள்ளி காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் நற்கருணை ஆசீர்

மற்றும் சிறப்பு திருப்பலி

திங்கள் -வியாழன்

காலை 6 மணிக்கு திருப்பலி

மாதா மலையில் (தினசரி வழிபாடுகள் )

திங்கள் - வியாழன

காலை 7 மணிக்கு திருப்பலி

வெள்ளி - ஞாயிறு

காலை 11 மணிக்கு திருப்பலி

மாதத்தில் முதல் சனி அன்று மாதா மலை

ஆலயத்தில் காலை 7 மணிக்கு திருப்பலி - (இணைய தள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 அக்டோபர் 2025, 18:43