பல்சுவை - நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் – அவர் நம்மை அன்பு கூர்ந்தார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
2013 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஏறக்குறைய 12 ஆண்டுகள் திருஅவையை மிகச்சிறப்பாக வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது பணிக்காலத்தில் நான்கு மிக முக்கியமான சுற்றுமடல்களை நமக்காக எழுதித் தந்துள்ளார். 2013ஆம் ஆண்டு Lumen fidei நம்பிக்கையின் ஒளி, 2015ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அக்கறை குறித்த Laudato si’, 2020ஆம் ஆண்டில் மனித உடன்பிறந்த நிலை குறித்த Fratelli tutti என்ற மூன்று சுற்றுமடல்களை வெளியிட்டார். இறுதியாக, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இயேசுவின் திருஇருதயம் குறித்த Dilexit nos என்ற நான்காவது சுற்றுமடலை வெளியிட்டார். நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் என்னும் நமது தொடரில் முதல் இரு சுற்று மடல்கள் குறித்து அருள்முனைவர் கசி இராயப்பா அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களுக்கு நாம் செவிசாய்த்தோம். மூன்றாவதாக திருத்தந்தை அவர்களால் வெளியிடப்பட்ட நாம் அனைவரும் உடன்பிறந்தோரே என்னும் சுற்றுமடல் குறித்தக் கருத்துக்களை அடுத்த வாரத்தில் காண இருக்கும் நிலையில் இன்றைய நம் நிகழ்வில் அவர் நம்மை அன்பு கூர்ந்தார் என்னும் நான்காவது சுற்றுமடல் குறித்தக் கருத்துக்களைக் காண இருக்கின்றோம்.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இயேசுவின் திருஇருதயம் குறித்த Dilexit nos என்ற நான்காவது சுற்றுமடலில் மொத்தம் 220 எண்களில் மனித மற்றும் இறைஅன்பில் இயேசுகிறிஸ்துவின் திருஇருதயஅன்பு குறித்து எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காயங்களை ஆற்றுவதற்கும், அன்பு மற்றும் பணியாற்றும் திறனை வலுப்படுத்துவதற்கும், இயேசுவினுடைய திருஇதயத்திலிருந்து வாழ்வளிக்கும் நீரின் ஆறுகள் நம் அனைவருக்குள்ளும் பாயவேண்டும், இயேசுவின் திருஇருதய அன்பானது நம்மை அன்பு செய்ய உந்தித்தள்ளுகின்றது, நமது சகோதரர்களை நோக்கிச் செல்ல நம்மை அனுப்புகின்றது என்றும் அச்சுற்றுமடலில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
Dilexit nos என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்காவது இறுதியுமாகிய சுற்றுமடல் குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அருள்முனைவரும் இயற்கை ஆர்வலருமான அருள்முனைவர் கசி இராயப்பா அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்