சீடருடன் இயேசு சீடருடன் இயேசு  

தடம் தந்த தகைமை - சற்று ஓய்வெடுங்கள்

இயேசு தனது சீடர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” (மாற் 6:31)

 

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஓயாத உழைப்பிற்கு ஓய்வு தேவையானது. இயேசு தன் சீடர்கள்மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தார். தம்மால் அனுப்பப்பட்டவர்கள் பணி முடித்துத் திரும்புகையில் அவர்களது முகங்களைப் பார்க்கின்றார். அதில் சோர்வு சேர்ந்திருந்ததைக் காண்கின்றார். எனவேதான் மக்கள் நடமாடாத பாலைவெளிக்குச் சென்று தனிமையில் இளைப்பாறப் பணிக்கிறார். இயேசுவின் தாயுள்ளப் பரிவு இங்கே தன்னிகரில்லாமல் தளிர்க்கின்றது.

ஓய்வு என்பது உண்டு குடித்து படுத்து உறங்குவதில்லை. தனிமைதரும் இனிமையில் தான் செய்த பணிகள், அவற்றைக் கையாண்ட விதங்கள், பயன்படுத்திய வார்த்தைகள், சந்தித்த மனிதர்கள், எதிர்கொண்ட சவால்கள், அதனில் பெற்ற அனுபவங்கள் என யாவற்றையும் அசைபோடக் கிடைத்த அரும்வாய்ப்பு. இயேசு சுட்டும் ஓய்வு உடல் ஓய்வானாலும் உள்ள ஆய்வுக்கு அழைப்பது. அந்த ஓய்வு அடுத்தகட்டப் பணிகளுக்கு நம்மை உந்தும் சக்தியாகப் பிறப்பெடுக்கும்.

இறைவா! என்னை செதுக்க ஓய்வு தேவை என்று உணர்வதோடு பரபரப்பு நிலை கடந்து உம் பாதம் அமர்ந்து என்னை ஆய்வு செய்யும் அருள் தாரும்.

“உம்  வாக்கின் வழியிலே” என்னும் நூலிலிருந்து அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 நவம்பர் 2025, 15:50