ஆயர் ஹிபோரோ குஸ்ஸலா ஆயர் ஹிபோரோ குஸ்ஸலா  

மாணவர்களின் தோள்களில் ஒரு நாடு கட்டமைக்கப்படுகிறது!

"உறுதியான கொள்கைகளைக் கொண்ட மாணவர்களின் தோள்களில் ஒரு நாடு கட்டமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் செயல்களில் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்" - ஆயர் ஹிபோரோ குஸ்ஸலா.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

மாணவர்கள், தேர்வுகளின்போது நேர்மையின்மை, ஏமாற்றுதல், விடைகளைத் திருடுதல், குறுக்கு வழிகளைப் பின்பற்றுதல் போன்ற செயல்களை தவிர்க்கவும், அல்லது தங்கள் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் எச்செயலையும் செய்யாதிருக்கவும்  மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார் தும்புரா யாம்பியோவின் ஆயர் பரணி எடுவார்டோ ஹிபோரோ குஸ்ஸலா.

நவம்பர் 25, இச்செவ்வாயன்று, அந்நாட்டில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 300 மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியபோது இவ்வாறு கூறிய ஆயர் ஹிபோரோ அவர்கள், மாணவர்கள் இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடுவது, அவர்களின் சொந்த எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த மாண்பிற்கும் இழைக்கப்படும் துரோகமாகும் என்றும் குறிப்பிட்டார்.

"தேர்வுகள் என்பது மாணவர்களை வீழ்த்தும் பொறிகள் அல்ல, அவை உண்மையை வெளிக்கொணரும் வாய்ப்புகள்" என்று சுட்டிக்காட்டிய ஆயர், மாணவர்கள் தலை நிமிர்ந்து நடக்கவும், நேர்மையாகவும், உன்னதமான உள்ளம் கொண்டவர்களாக இருக்கவும் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.

மேலும் உறுதியான கொள்கைகளைக் கொண்ட மாணவர்களின் தோள்களில் ஒரு நாடு கட்டமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் செயல்களில் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அறிவு மற்றும் நம்பிக்கையின் ஒளியில் எந்தக் குழந்தையும் பின்தங்கிவிடக்கூடாது என்று எடுத்துக்காட்டிய ஆயர், "நீங்கள் தனியாக பயணிக்கவில்லை, மாறாக கடவுளுடனும், அவர்களின் மூதாதையருடனும், ஆசிரியர்களுடனும், உங்களுக்கு ஆதரவளித்து உற்சாகப்படுத்தும் முழு நாட்டு மக்களுடனும் பயணிக்கிறீர்கள்" என்றும் கூறினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 நவம்பர் 2025, 15:13