புதிதாக அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் புதிதாக அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்   (ANSA)

புதிதாக அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு!

"புதிதாக அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், தொழிலாளர்களின் திறனைக் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது" : கிறிஸ்தவத் தொழிற்சங்கங்கள்

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்களும் தொழிலாளர் சங்கங்களும் புதிதாக அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டத் திருத்தங்களை விமர்சித்துள்ளதாகவும், அவை தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தொழிலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அருள்பணி ஜார்ஜ் தாமஸ்  அவர்களும், இந்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும்,  இந்தச் சட்டத் திருத்தங்கள் பற்றி குறிப்பிடுகையில், அவை முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், தொழிலாளர்களின் திறனைக் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் பணித்தொடர்பான பாதுகாப்பை  உள்ளடக்கிய சட்டங்கள், இந்தியாவின் தொழிலாளர் அமைப்பை நவீனமயமாக்குவதாகக் கூறிக் கொண்டு, தொழிலாளர்களை மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகின்றன என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள், அமைப்புசாரா துறைக்கு போதுமான சமூகப் பாதுகாப்பு இல்லாதது மற்றும் 300 ஊழியர்கள் வரை உள்ள வணிகங்களை அரசு ஒப்புதல் இல்லாமல் மூட அனுமதிக்கும் விதி ஆகியவை தங்களின் முக்கிய கவலைகளாக வெளிப்படுத்தினர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 நவம்பர் 2025, 15:29