கர்தினால்  பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

குழந்தைகளின் மாண்பைக் காப்போம்! : கர்தினால் பரோலின் அழைப்பு!

செயற்கை நுண்ணறிவின் அதீத முன்னேற்றங்களால் எழும் இருத்தலியல் மற்றும் தார்மீக சவால்களை கருத்தில்கொண்டு, தொழில்நுட்பத்தை மனித முன்னேற்றத்தை நோக்கி நடத்த, பல்வகைப்பட்ட மற்றும் பல்கலாச்சார ஒத்துழைப்பு அவசியம் : கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஜான்சி ராணி அருளாந்து

உரோமையில்  இடம்பெற்ற  "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் குழந்தைகள் மற்றும் இளையோரின் மாண்பு" என்ற தலைப்பிலான அனைத்துலக மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை உயிர் வடிவங்கள் மனித மாண்பை மதிக்கத் தவறினால், மனிதகுலம் "தன்னுடைய அழிவை" சந்திக்க நேரிடும் என்று  எச்சரித்தார்.திருப்பீடச்செயலர் கர்தினால்  பியெத்ரோ பரோலின்.

செயற்கை நுண்ணறிவின் அதீத முன்னேற்றங்களால் எழும் இருத்தலியல் மற்றும் தார்மீக சவால்களை எடுத்துக்காட்டி. தொழில்நுட்பத்தை மனித முன்னேற்றத்தை நோக்கி நடத்த, பல்வகைப்பட்ட மற்றும் பல்கலாச்சார ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2017 ஆம் ஆண்டு உரையை நினைவுகூர்ந்த கர்தினால்  பரோலின் அவர்கள், தொழில்நுட்பமானது நலம் தரக்கூடிய, அதிக மனிதநேயம் கொண்ட, மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை நோக்கியே இயக்கப்பட வேண்டும் என்று பங்கேற்பாளர்களிடம் நினைவூட்டினார்.

Telefono Azzurro மற்றும் Foundation Child ஆகிய இரு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், கல்வி, அறிவியல், மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 நவம்பர் 2025, 14:51