பிலிப்பீன்சில் கத்தோலிக்க ஆசிரியர் படுகொலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 4, செவ்வாய்க்கிழமையன்று, பிலிப்பீன்சில் கத்தோலிக்க ஆசிரியர் மார்க் கிறிஸ்டியன் மலாக்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து, அந்நாட்டின் கபனாட்டுவானில் உள்ள கத்தோலிக்கச் சமூகம் நீதி மற்றும் உண்மைகாகக் குரல் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளது பீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம்
39 வயதான மலாக்கா, சான் ஜுவான் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கல்வியின் மீதான நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்கு அறியப்பட்ட அவரின் மரணம் அவரது குடும்பம், உள்ளூர் பள்ளி மற்றும் தலத்திருஅவையை ஆழமாக பாதித்துள்ளது என்று அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.
படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் மலாக்கா கற்பித்த புனித ஸ்தேவான் கல்விக்கழகமும் நீதியைக் கோரியுள்ளது என்றும், இந்தத் தாக்குதல் ஆசிரியர் தொழிலின் மாண்பைக் குறிவைத்ததாகக் கூறியுள்ளது என்றும் மேலும் உரைக்கின்றது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கபானதுவான் மறைமாவட்டத்தின் ஆயர் Prudencio Andaya அவர்கள் ஆசிரியர் மலாக்காவின் படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் "ஒரு கத்தோலிக்க ஆசிரியராக, மலாக்கா மனதையும் இதயத்தையும் உண்மையிலும் நல்லொழுக்கத்திலும் உருவாக்கும் உன்னதப் பணியில் பங்கேற்றார்," என்றும் "அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, நமது சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பிற்கும் ஓர் இழப்பாகும்" என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்