புனித இசிதோர் புனித இசிதோர்  

இன்றைய புனிதர்

திரு. பிலோமி அலெக்ஸ்

புனித இசிதோர்

ஸ்பெயின் நாட்டிலுள்ள மாட்ரிட் பகுதியில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில்  கி.பி 1070 ஆம் ஆண்டு பிறந்தார் இசிதோர். விவசாய பணிகளை செய்த இவர் மேரி தேலா கபேலா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு இல்லறத்தில் ஈடுபட்டார். இறைபக்தியில் சிறந்திருந்த இசிதோரும்,கபேலாவும் எளிய மக்கள் மீது அன்பு கொண்டு அவர்கள் வாழ்வதற்கு தேவையான உதவிகள் செய்தனர்.  விலங்குகளும் இறைவனுடைய படைப்பே  என்று அறிவித்த இசிதோர் உடல் நிலை சரியில்லாத விலங்குகளுக்கு தேவையான மருத்துவ  உதவியினை செய்து பராமரிப்பு செய்தார்.அனுதினமும் திருப்பலியில் பங்குக்கொண்டு நற்கருனை ஆண்டவரை சுவைத்த இவர் தான் பணிசெய்யும் இடத்தில் மிகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டார்.

தன் உழைப்பின் மூலம் ஈட்டிய செல்வங்களை ஏழைகளுக்கு அளித்து வாழ்ந்த இசிதோர் மாட்ரிட் கி.பி 1130-ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் விண்ணகமடைந்தார். 40ஆண்டுகளுக்கு பின்பு இசிதோரின்  கல்லரை தோண்டப்பட்டபொது இவரின் உடல் அழியாமல் அப்படியே இருக்க இசிதோரின் உடலுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு Þபெயின் நாட்டிலுள்ள அந்திரேயா ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இசித்தோரின் கல்லரையில் வேண்டுதல் செய்பவர்களுக்கு புதுமைகள் நிகழ கி.பி 1622 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் திருத்தந்தை 15ஆம் கிரகோரியார் இசிதோரை புனிதராக உயர்த்தினார். இன்று மாட்ரிட் நகர் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம் நம் நாட்டிற்க்காகவும் நமது நாட்டினை நல்ல தலைவர்கள் அரசாள வேண்டுமென்று செபிப்போம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மே 2026, 12:55