ஜெமெல்லி மருத்துவமனைக்கு வெளியே திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யும் திருப்பயணிகள் ஜெமெல்லி மருத்துவமனைக்கு வெளியே திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யும் திருப்பயணிகள்  

திருத்தந்தையின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது!

மார்ச் 05, புதன்கிழமை காலை, 10-வது மாடியில் உள்ள சிற்றாலயத்தில் திருநீற்றுப்பூதன் திருச்சடங்கில் பங்குகொண்டு திருநற்கருணையை உட்கொண்டார் என்றும், அதன்பிறகு வழக்கம்போல் தனது அலுவலகப் பணிகளில் ஈடுபட்டார் என்றும் தெரிவிக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

மார்ச் 05, புதன்கிழமை முழுவதும் திருத்தந்தையின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருந்தது என்றும், அவருக்கு சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

மருத்துவ ஆய்வுகளின்படி அதிகளவு செயற்கை ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறை திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது என்றும், சுவாச உடலியக்க மருத்துவம் மற்றும் செயல்திறன்மிக்க விசையுந்து பிணி நீக்கல் முறை (respiratory physiotherapy and active motor therapy) இரண்டையும் அவருக்கு மருத்துவர்கள் அதிகரித்துள்ளனர் என்றும் கூறுகிறது அதன் அறிக்கை.

மார்ச் 05, புதன்கிழமையை திருத்தந்தை நாற்காலியில் அமர்ந்தவாறு கழித்தார் என்றும், மருத்துவ சூழ்நிலையின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, அவரது நோய் குறித்த முன்னறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் உரைக்கிறது அவ்வறிக்கை.

மார்ச் 05, புதன்கிழமை காலை, 10-வது மாடியில் உள்ள சிற்றாலயத்தில் திருநீற்றுப்பூதன் திருச்சடங்கில் பங்குகொண்டு திருநற்கருணையை உட்கொண்டார் என்றும், அதன்பிறகு வழக்கம்போல் தனது அலுவலகப் பணிகளில் ஈடுபட்டார் என்றும் தெரிவிக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

அலைபேசியில் உரையாடல்

சிறப்பாக, மார்ச் 05, புதன்கிழமை காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் பங்குப்பணியாளர் கபிரியேல் ரொமானெல்லியை அலைபேசியில் அழைத்து உரையாடியனார் என்றும், மதியம், சிறிது நேரம் ஓய்வு, சிறிதுநேரம் அலுவலகப் பணி என மாறி மாறி செயல்பட்டார் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மார்ச் 06, வியாழக்கிழமை இன்று

மார்ச் 05, புதன்கிழமை இரவு சுவாசக் கோளாறு பிரச்சனைகள் எதுவுமின்றி நன்றாக உறங்கினார் என்றும், மார்ச் 06, வியாழக்கிழமை காலையும் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 மார்ச் 2025, 09:57