புதன் மறைக்கல்வி உரை தூய ஆறாம் பவுல் அரங்கத்தில்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இத்தாலியில் கோடை வெயிலினால் வெப்பநிலை அதிகரித்து வருவதை முன்னிட்டு வழக்கமாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெறும் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையானது ஆகஸ்டு 13, புதன்கிழமையன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற இருக்கின்றது.
“இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு” என்னும் தலைப்பில் தனது தொடர் மறைக்கல்வி உரையினை வழங்கி வரும் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் ஆகஸ்டு 13, புதன்கிழமை தனது உரையினை ஆறாம் பவுல் அரங்கத்தில் நிகழ்த்த இருக்கின்றார்.
புதன் மறைக்கல்வி உரையின் நிறைவில் அரங்கத்தில் இடம் இல்லாமல் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் அமர்ந்து, திரையில் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை கேட்கும் மக்களைச் சந்திக்க இருக்கின்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
