SECAM ஆண்டு நிறையமைர்வுக் கூட்டத்திற்கானத் திருப்பலியில் பங்கேற்றோர் SECAM ஆண்டு நிறையமைர்வுக் கூட்டத்திற்கானத் திருப்பலியில் பங்கேற்றோர்  

நம்பிக்கையின் உறுதியான அடையாளங்களாக ஆயர்கள் திகழ...

திருத்தந்தையின் செய்தியானது கின்சாஷா உயர் மறைமாவட்டப் பேராயரும் ஆப்ரிக்கா மற்றும் மடகஸ்கார் ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் Fridolin Ambongo Besungu அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உள்ளூர் தலத்திருஅவைகள், மற்றும் அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையின் உறுதியான அடையாளங்களாக ஆப்ரிக்கா மற்றும் மடகஸ்கார் ஆயர்கள் இருக்க வேண்டும் என்றும், கடவுளது அன்பின் தீவிர அனுபவத்தை இதயங்களில் எழுப்புவதன் முக்கியத்துவத்தை ஆயர்களுக்கான பொதுப்பேரவை எடுத்துக்காட்டுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர் மாநாடுகளின் (SECAM) 20வது ஆண்டு நிறையமர்வு பொதுப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்த்துச்செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

“எதிர்நோக்கு, நல்லிணக்கம், மற்றும் அமைதியின் ஆதாரம் கிறிஸ்துவே” என்ற கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்த நிறையமர்வுக் கூட்டத்திற்கான திருத்தந்தையின் செய்தியானது கின்சாஷா உயர் மறைமாவட்டப் பேராயரும் ஆப்ரிக்கா மற்றும் மடகஸ்கார்  ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் Fridolin Ambongo Besungu அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கிறிஸ்துவில் மீட்பின் உறுதியான நம்பிக்கையை இதயங்களில் எழும்புகிறது என்றும், குறிப்பாக பிளவு மற்றும் எல்லைப்பிரச்சனைகளால் உடைந்த சமூகத்தின் பகுதிகளில் ஒற்றுமையை ஊக்குவிக்க ஆயர்களுக்கான நிறையமர்வு பொதுப்பேரவை நம்மைத் தூண்டுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

உள்ளூர் தலத்திருஅவைகள், மற்றும் அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையின் உறுதியான அடையாளங்களாக ஆயர்கள் இருக்க வேண்டும் என்றும், நம்பிக்கையின் தாயான கன்னி மரியாவின் பரிந்துரையில் ஆயர்கள் தங்களது  எதிர்காலத் திட்டங்களை ஒப்படைத்து, பணியாற்ற திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் இறை ஒன்றிப்பையும் அச்செய்தியின் வழியாக வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஆகஸ்ட் 2025, 11:27