ஏழைகளுக்கான புனித பிரான்சிஸ் பணிக் குழுவினருடன் திருத்தந்தை ஏழைகளுக்கான புனித பிரான்சிஸ் பணிக் குழுவினருடன் திருத்தந்தை   (ANSA)

மற்றவர்களின் தேவைகளுக்கு உதவ நம்மைத் தயார் நிலையில் வைத்திருத்தல

மற்றவர்களின் ஒருங்கிணைந்த நல்வாழ்வில் கவனம் செலுத்துவதன் வழியாக உண்மையைக் கடைப்பிடிப்பது, "ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வாய்ப்பு - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

புனித பிரான்சிஸின் ஏழைகளுக்கான பணிக்குழுவானது, உதவி செய்தல், வரவேற்றல் மற்றும் ஊக்குவித்தல் என்னும் மூன்று அடிப்படை அம்சங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது என்றும், உதவி செய்வது என்பது மற்றவர்களின் தேவைகளுக்கு உதவ தன்னை தயார் நிலையில் இருப்பதைக் குறிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 1, திங்களன்று வத்திக்கானில் ஏழைகளுக்கான புனித பிரான்சிஸ் பணிக் குழுவினரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மற்றவர்களின் ஒருங்கிணைந்த நல்வாழ்வில் கவனம் செலுத்துவதன் வழியாக உண்மையைக் கடைப்பிடிப்பது, "ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் எடுத்துரைத்தார்.

உதவி செய்தல்,

பல ஆண்டுகளாக தங்களிடம் வரும் மக்களுக்கு சுவையான உணாவு, உடை, குளியலறை, மருந்தகங்கள், உளவியல் ஆதரவுப் பணிகள், பணி ஆலோசனைகள் என  ஆண்டுக்கு 30,000 க்கும் மேற்பட்ட மக்களை பல்வேறு வழிகளில் ஆதரித்து வருகின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வரவேற்றல்

நம் இதயங்களிலும் நம் வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு இடமளித்தல், அவர்களுக்கு நமது நேரத்தை வழங்குதல், அவர்கள் சொல்வதைக் கேட்டல், அவர்களுக்கு ஆதரவளித்தல், அவர்களுக்காக செபித்தல் ஆகியவை அடங்கும் என்றும், கண்களைப் பார்ப்பது, கைகுலுக்கி, அவர்களைப் பார்த்து நிற்பது போன்ற மனப்பான்மையே, திருத்தந்தை பிரன்சிஸ் அவர்களுக்கு மிகவும் பிரியமானது என்றும் கூறினார்.

நமது சூழலில் ஒரு குடும்ப சூழ்நிலையை வளர்க்க நம்மைத் தூண்டுகிறது மற்றும் "நாம்" என்ற ஒளிரும் ஒற்றுமை வழியாக "நான்" என்ற தனிமையைக் கடக்க உதவ வேண்டும், தனிமை அதிகமாக இருக்கும் நமது சமூகத்தில் இந்த உணர்திறனை நாம் அதிகமாக பரப்ப வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

ஊக்குவித்தல்.

கொடுப்பதன் தன்னலமற்ற தன்மை, மனிதர்களின் மாண்பிற்கு மரியாதை செலுத்துதல் போன்றவற்றாஇ மக்களுக்கு வழங்கி ஊக்கமளித்து வருகின்றனர் என்றும், கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வழியைக் காட்டுகிறார், அதைப் பின்பற்ற நமக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறார், நம்மை சுதந்திரமாக செயல்பட விட்டுகின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 செப்டம்பர் 2025, 15:31