தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் திருத்தந்தை பதினான்காம் லியோ தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

மேய்ப்புப்பணி அணுகுமுறையை நிறுவுவதற்கான அவசரத்தேவை

இளைஞர்கள் மற்றும் குடும்பங்களை உள்ளடக்கிய பங்கேற்பு அமைப்புகள் மற்றும் மறைக்கல்வியாளர்களின் உருவாக்கத்தை வலுப்படுத்தும் ஒரு திருஅவையை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒன்றிப்பு, தீர்ப்பிடாத தன்மை, மற்றும் அனைவரையும் வரவேற்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் மேய்ப்புப்பணிக்கான அணுகுமுறையை நிறுவுவதற்கான அவசரத்தன்மை தேவையாக உள்ளது என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமை மாலை உரோமில் உள்ள தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  

இளைஞர்கள் மற்றும் குடும்பங்களை உள்ளடக்கிய பங்கேற்பு அமைப்புகள் மற்றும் மறைக்கல்வியாளர்களின் உருவாக்கத்தை வலுப்படுத்தும் ஒரு திருஅவையை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உரோம் மறைமாவட்ட ஆயராக தனது மேய்ப்புப்பணியின் கீழ் இருக்கும் மக்களைச் சந்தித்து உரையாடினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய கர்தினால் ரெய்னா அவர்கள், மோதலால் இரத்தக்களரியான உலகத்தால் திகைத்துப்போன மக்களுக்கு நமது வாழ்க்கையால் எதிர்நோக்கின் சான்றுகளாக  இருக்க விரும்புகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலின் வார்த்தைகள் திருப்பாடல் எண் 34 ஆகியவை வாசித்து தியானிக்கப்பட்டபின்னர் யோவான் நற்செய்தியில் சமாரியப்பெண்ணும் இயேசுவும் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டன.

சீடத்துவத்திற்கு உறுதியளித்து, அதன் சுமைகளைத் தாங்கி, அதைத் தொடர்ந்து செய்பவர்களுக்கும், அதே நேரத்தில், நகரத்தின் திருஅவைச் சமூகங்களின் கதவுகளைத் தட்டுபவர்களின் சுமைகளைக் குறைப்பவர்களுக்கும் நன்றி கூறிய திருத்தந்தை அவர்கள், "இந்த கடினமான காலங்களில்" அவர்கள் ஆற்றும் பணி மிகவும் விலைமதிப்பற்றது என்றும் எடுத்துரைத்தார்.

சமாரியப் பெண் பற்றிய நற்செய்திக் கருத்துக்களை தெரிவிக்கையில் தூய ஆவியாரின் கொடையில், "நமது தாகத்தைத் தணித்து, நமது வறட்சியைப் பயிரிட்டு, நமது பாதையில் வெளிச்சமாக மாறும்" வாழ்வுதரும் நீரைப் பற்றி கூறிய திருத்தந்தை அவர்கள், உரோம் திருஅவையைப் புத்துயிர் பெறச் செய்யும் திறன் கொண்ட தூயஆவியாரிடம் ஒப்படைத்து, இந்த திருஅவையை கூட்டொருங்கியக்கத்தின் பயிற்சி நிலையமாக மாற்ற ஒத்துழைக்கக் கேட்டுக்கொண்டார்.

நம்பிக்கையைப் பரப்புவதில், இறைவாக்குத் தேவைப்படும் ஒரு நகரத்தில், ஏராளமான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் இருத்தலியல், வறுமை வடிவங்களால் குறிக்கப்பட்டுள்ளது என்றும், இளைஞர்கள் பெரும்பாலும் திசைதிருப்பப்படுகிறார்கள் மற்றும் குடும்பங்களில் இருப்பவர்கள் சுமைகளோடு இருக்கிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 செப்டம்பர் 2025, 15:16