பல்வேறு மத மரபுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்காக செபிப்போம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பல்வேறு மத மரபுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்காக செபிக்க வலியுறுத்தி அக்டோபர் மாத செபக்கருத்தினை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
வெவ்வேறு மத மரபுகளில் உள்ள நம்னிக்கையாளர்கள் அமைதி, நீதி மற்றும் மனித சகோதரத்துவத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நாம் செபிப்போம் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மேலும் கீழ்க்கண்டவாறு செபம் ஒன்றினை எழுதி அதனையும் அக்டோபர் மாத செபக்கருத்தாக தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
ஆண்டவராகிய இயேசுவே,
வேற்றுமைகளில் ஒற்றுமையாக இருக்கும் நீர், ஒவ்வொரு நபரையும் அன்புடன் பார்த்து, நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக, ஒன்றாக இணைந்து வாழவும், செபிக்கவும், பணியாற்றவும், கனவு காணவும் அழைக்கப்பட்டவராக நம்மை அடையாளம் காண எங்களுக்கு உதவும்.
நாம் அழகு நிறைந்த உலகில் வாழ்கிறோம், ஆனால் ஆழமான பிளவுகளால் காயமடைந்தவர்களாகவும் இருக்கிறோம். சில நேரங்களில், மதங்கள், நம்மை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, மோதலுக்கு ஒரு காரணமாகின்றன.
எங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்த உமது ஆவியை எங்களுக்குத் தாரும், அதனால் நம்மை ஒன்றிணைப்பதை நாம் அடையாளம் காணவும், எதனையும் அழிக்காமல் கேட்கவும் ஒத்துழைக்கவும் மீண்டும் கற்றுக்கொள்ள முடியும்.
மதங்களில் அமைதி, நீதி மற்றும் உடன்பிறந்த உணர்வின் உறுதியான எடுத்துக்காட்டுகள், நமது வேறுபாடுகளுக்கு அப்பால், ஒன்றாக வாழவும், ஒன்றாக வேலை செய்யவும் முடியும் என்று நம்ப நம்மை ஊக்குவிக்கட்டும்.
மதங்கள் ஆயுதங்களாகவோ அல்லது சுவர்களாகவோ பயன்படுத்தப்படாமல், பாலங்களாகவும் இறைவாக்குகளாகவும் வாழட்டும். பொது நன்மைக்கான கனவை நம்பகமானதாக மாற்றுதல், வாழ்க்கையுடன் சேர்ந்து, நம்பிக்கையை நிலைநிறுத்துதல், துண்டு துண்டான உலகில் ஒற்றுமையின் புளிக்காராமாக இருத்தல் போன்றவற்றிற்கு மதங்கள் காரணமாக இருக்கட்டும்.
ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
