கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் திருஅவையின் சிறந்த கருவிகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"கல்வி இன்று எதிர்கொள்ளும் சவால்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். படைப்பாற்றலுடனும், இறையருள் உங்களைத் தாங்குகிறது என்ற விழிப்புணர்வுடனும், திருச்சபை உங்களிடம் ஒப்படைத்துள்ள பணியில் தொடருங்கள்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 31, வெள்ளியன்று, திருப்பீடத்தில் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் அமைப்பின் (ODUCAL) உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை அவர்களிடம் இவ்வாறு உரைத்தார்.
திருஅவையின் கல்விப் பணிக்கான அவர்களின் சேவைக்குத் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, மேலும் அவர்களின் ஒத்துழைப்பை ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக எடுத்துக்காட்டினார்.
இலத்தீன் அமெரிக்காவில் முதல் பல்கலைக்கழகங்களை நிறுவுவதில் திருஅவையின் வரலாற்றுப் பங்கை நினைவுகூர்ந்த திருத்தந்தை, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் இறை நம்பிக்கை மற்றும் பகுத்தறிவை ஒருங்கிணைத்து படைப்பாற்றல், அறிவு மற்றும் நற்செய்தி அறிவிப்பின் மையங்களாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தினார்.
விமர்சன சிந்தனை, நம்பிக்கை மற்றும் பொது நன்மைக்கான அர்ப்பணிப்பை வளர்ப்பதன் வழியாக மக்களை அறிவுபூர்வமாகவும், ஆன்மிக மற்றும், சமூக ரீதியாகவும் முழுமையாக உருவாக்குவதே அவற்றின் நோக்கம் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
மேலும் படைப்பாற்றல் மற்றும் கடவுளின் அருளில் நம்பிக்கையுடன் நவீன கல்வி சவால்களை எதிர்கொள்ளவும் திருத்தந்தை அவர்களை ஊக்குவித்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவுசெய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
