அரசர் மூன்றாம் சார்லஸ் உடன் திருத்தந்தை அரசர் மூன்றாம் சார்லஸ் உடன் திருத்தந்தை  (@Vatican Media)

அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அரசி கமிலாவுடன் திருத்தந்தை

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் போது அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அக்டோபர் 23, வியாழன் காலை வத்திக்கான் திருத்தூது மாளிகையில் இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அரசி கமிலா ஆகியோரை சந்தித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தையுடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களையும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரையும் சந்தித்தனர்.

அரச செயலகத்தில் நடந்த சுமுகமான பேச்சுவார்த்தைகளின்போது, இருதரப்பு உறவுகளுக்கு இடையே தற்போதுள்ள நல்ல தொடர்பிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வறுமைக்கு எதிரான போராட்டம் போன்ற பொதுவான ஆர்வமுள்ள விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் போது அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

இறுதியாக, ஐக்கிய அரசில் உள்ள திருஅவையின் வரலாற்றை நினைவு கூர்ந்து, கிறிஸ்தவ உரையாடலைத் தொடர்ந்து ஊக்குவிப்பதன் அவசியம் குறித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 அக்டோபர் 2025, 18:37