திருத்தந்தையின் துருக்கி திருத்தூதுப் பயண 3-ஆம் நாள் நிகழ்வுகள்

இஸ்தான்புல்லிலுள்ள வோக்ஸ்வாகன் அரங்கத்தில் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியைத் தலைமையேற்று நடத்தி மறையுரை வழங்கினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 29, காலை "நீல மசூதி" என்று அழைக்கப்படும் சுல்தான் அகமது மசூதிக்கு மேற்கொண்ட சிறியதொரு வருகையுடன் துருக்கி நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாளைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அதன்பின்னர் மாலை 03.30 மணிக்கு இஸ்தான்புல்லில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்ற இறைபுகழ்ச்சி வழிபாட்டில் கலந்துகொண்டு அருளுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாலை 05.00 மணிக்கு இஸ்தான்புல்லிலுள்ள வோக்ஸ்வாகன் அரங்கத்தில் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியைத் தலைமையேற்று நடத்தி மறையுரை வழங்கினார். இத்திருப்பலியில் துருக்கி நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 4,000 விசுவாசிகள் பங்குபெற்றனர்.

இத்துடன் திருத்தந்தையின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வருகின்றன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 நவம்பர் 2025, 14:01