லெபனோனின் தலைநகர் பெய்ரூத்திற்குச் செல்லும் திருத்தந்தை லெபனோனின் தலைநகர் பெய்ரூத்திற்குச் செல்லும் திருத்தந்தை  (KEMAL ASLAN)

திருத்தந்தையின் நான்காம் நாள் நிகழ்வுகள்

நவம்பர் 30, ஞாயிறன்று, காலை 10.30 மணிக்கு இஸ்தான்புல்லில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் இடம்பெற்ற இறைபுகழ்ச்சி வழிபாட்டின் இறுதியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அருளுரை வழங்கினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 30, ஞாயிறன்று, காலை 09.30 மணிக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இஸ்தான்புல்லின் அப்போஸ்தலிக்கப் பேராலயத்தில் ஆர்மீனிய முதுபெரும் தந்தை இரண்டாம் சஹாக் அவர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதுடன் அவரது நான்காம் நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து காலை  10.30 மணிக்கு இஸ்தான்புல்லில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் இடம்பெற்ற இறைபுகழ்ச்சி வழிபாட்டின் இறுதியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அருளுரை வழங்கினார்.

இத்துடன் துருக்கி நாட்டிற்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் திருத்தூதுப் பயணம் நிறைவுபெற்றது. இதன் பிறகு உள்ளூர் நேரம் மாலை 02.45 மணிக்கு இத்தாலிய விமானத்தில் லெபனோனின் தலைநகர் பெய்ரூத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 நவம்பர் 2025, 14:10