திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயணம் 

திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயணம்

உரோமை உள்ளூர் நேரம் காலை 7:58 மணிக்கு அதாவது, இந்திய இலங்கை நேரம் நண்பகல் 12.28 மணிக்கு உரோமை ஃபியுமிசினோ விமான நிலையத்திலிருந்து திருத்தந்தையின் விமானம் துருக்கியின் தலைநகர் அங்காராவுக்குப் புறப்பட்டுச் சென்றது. திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயணம் தொடங்கியது!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 27, வியாழன் காலை, தனது முதல் திருத்தூதுப் பயணமாக துருக்கிக்கு புறப்பட்டுச் சென்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ

உரோமை உள்ளூர் நேரம் காலை 7:58 மணிக்கு அதாவது, இந்திய இலங்கை நேரம்  நண்பகல் 12.28 மணிக்கு உரோமை ஃபியுமிசினோ விமான நிலையத்திலிருந்து திருத்தந்தையின் விமானம் துருக்கியின் தலைநகர் அங்காராவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

திருத்தந்தை பயணித்த A320neo என்ற இத்தாலிய விமானம் அகுஸ்தினார் சபையினரால் அதிகம் அன்புகூரப்படும் அன்னை கன்னி மரியாவின் "நல்ல ஆலோசனை மாதாவே" என்ற தலைப்பிலான திருவுருவத்தைத் தாங்கியிருந்தது.

துருக்கி மற்றும் லெபனோனுக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் அதன் தலைநகர் அங்காராவிலுள்ள துருக்கி குடியரசின் தந்தை முஸ்தபா கெமால் அதாதுர்க்கின் கல்லறை நினைவிடத்தில் தொடங்குகிறது.

பின்னர் அவர் மீண்டும் திருத்தந்தைக்குரிய விமானத்தில் திருத்தந்தை லியோ அவர்கள் இஸ்தான்புல்லுக்குப் பயணிப்பார், அங்கு அவர் திருப்பீடத் தூதரின் தூதரக அலுவலத்தில் தங்குவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 நவம்பர் 2025, 14:44