அனைத்துலக மதங்கள் அமைப்பு மற்றும் சங்கங்களின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை அனைத்துலக மதங்கள் அமைப்பு மற்றும் சங்கங்களின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

கத்தோலிக்க கல்வி நம்பிக்கையின் அடையாளங்களை வழங்க வேண்டும்

வடக்கு மற்றும் தெற்கு இடையேயான மறைப்பணிக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஆப்பிரிக்க கல்வியை மேம்படுத்தும் தங்கள் பணியைத் தொடர வேண்டுமென அவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆப்பிரிக்காவில் தரமான கல்வியையும் உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் அனைத்துலக மதங்கள் அமைப்பு மற்றும் சங்கங்களின் உறுப்பினர்களை நவம்பர் 7, வெள்ளிக்கிழமையன்று சந்தித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

வடக்கு மற்றும் தெற்கு இடையேயான மறைப்பணிக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் அதேவேளையில், ஆப்பிரிக்க கல்வியை மேம்படுத்தும் தங்கள் பணியைத் தொடர  வேண்டுமென அவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை

இயேசு தம்முடைய சீடர்களை "இரண்டு இருவராக" அனுப்பினார் என்றும், இது நற்செய்தியை அறிவிப்பதில் ஒத்துழைப்பின் அவசியத்தைக் குறிக்கிறது என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

பெல்ஜியத்தின் வாலோனியாவில் உள்ள மாரெட்சஸ் துறவு மடம் ஒன்றில் மே மாதம் அனைத்துலக மதங்கள் அமைப்பு மற்றும் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, மறைத்தூதுப் பணியியல் மற்றும் வடக்கு-தெற்கு மேய்ப்புப்பணி ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையத்தை நிறுவுவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு அவர் ஆதரவைத் தெரிவித்தார்.

"இந்த நிறுவனம் பலனளிக்கும் என்றும், உங்கள் தீர்மானங்களில் வெளிப்படுத்தப்பட்ட இலக்குகளை அடையும் என்றும் தான் நம்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, ஏனென்றால் நாம் ஒன்றிணைந்து மறைப்பணிக்கான உந்துதலை மீண்டும் கண்டுபிடிக்க விரும்புகிறோம் என்றும், இது இயேசுவின் நற்செய்தியை துணிவுடனும் அன்புடனும் முன்மொழிகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, நற்செய்தி அறிவிப்புப் பணியின் அழகை அனைவருக்கும் நினைவூட்ட ஆப்பிரிக்காவிலுள்ள கல்வியாளர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், ஆண்டவர் இயேசு  அவர்களை அவரது திருவுளப்படி மறைபரப்பு பணியின் சீடர்களாகவும் போதகர்களாகவும் மாற்ற வேண்டும் இறைவேண்டல் செய்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 நவம்பர் 2025, 14:52