இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறையில் திருத்தந்தைலியோ அவர்கள்  இறைவேண்டல் இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறையில் திருத்தந்தைலியோ அவர்கள் இறைவேண்டல்   (ANSA)

புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை இறைவேண்டல்!

திருத்தந்தை லியோ அவர்கள் தனது மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மிகுந்த பாசத்துடன் நினைவு கூர்ந்தார். மேலும் யூபிலி ஆண்டின் புனிதக் கதவைத் திறந்து உயிர்ப்புதின ஆசீரை வழங்கிய சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வாராந்திர ஓய்வுக்காக காஸ்தல் கந்தோல்போவுக்குச் செல்லும் வழியில், புனித மேரி மேஜர் பெருங்கோவிலிலுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறையிலும், அன்னை மரியா திருவுருவப்படத்திற்கு முன்பாகவும் இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறையில் வெள்ளை ரோஜாக்களின் பூங்கொத்தை அஞ்சலி செலுத்தும் விதமாக வைத்து இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை. இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் பிரியமான லிசியக்ஸின் புனித தெரேஸின் நினைவாக பாரம்பரியமாக அங்கு விடப்படும் ஒற்றை வெள்ளை ரோஜாவின் இருப்பை எதிரொலிக்கும் ஓர் அடையாளமாகும்.

அன்றைய தினத்தின் தொடக்கத்தில், இறைபதமடைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, திருத்தந்தை லியோ அவர்கள் புனித பேதுரு பெருங்கோவிலில்  திருப்பலி நிறைவேற்றினார்.

திருத்தந்தை லியோ அவர்கள் தனது மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மிகுந்த பாசத்துடன் நினைவு கூர்ந்தார். மேலும் யூபிலி ஆண்டின் புனிதக் கதவைத் திறந்து உயிர்ப்புதின ஆசீரை வழங்கிய சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

யூபிலியுடன் இணைந்த இந்தக் கொண்டாட்டம், கிறிஸ்தவ நம்பிக்கையின் சிறப்பு உணர்வைக் கொண்டிருந்தது என்றும், இந்த நம்பிக்கையை அவரது முன்னோடி மற்றும் மறைந்த மேய்ப்புப் பணியாளர்கள் வாழ்ந்து கற்பித்ததாகவும் கூறினார் திருத்தந்தை லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 நவம்பர் 2025, 15:32