முதுபெரும் தந்தை இரஃபேல் பெத்ரோஸ் முதுபெரும் தந்தை இரஃபேல் பெத்ரோஸ்  (ufficio stampa Patriarcato Armeno)

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது!

"திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் துருக்கி மற்றும் லெபனோனுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் இவ்விருநாடுகளிலும் நம்பிக்கை, ஒன்றிப்பு, அமைதி மற்றும் நீதியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது" : முதுபெரும் தந்தை இரஃபேல் பெத்ரோஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், துருக்கி மற்றும் லெபனோனுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் இவ்விருநாடுகளிலும் நம்பிக்கை, ஒன்றிப்பு, அமைதி மற்றும் நீதியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது என்று கூறினார் முதுபெரும் தந்தை இரஃபேல் பெத்ரோஸ்

வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், அர்மீனிய கத்தோலிக்கத் திருஅவையின்  முதுபெரும் தந்தை இரஃபேல் பெத்ரோஸ் 21-ஆம் மினாசியன் அவர்கள்,  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் துருக்கி மற்றும் லெபனோன் நாடுகளுக்கான திருத்தூதுப் பயணம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.

குறிப்பாக,. இளைஞர்களுடனான சந்திப்பின் போதும், பெய்ரூத்தில் இடம்பெற்ற இறுதி இறைவேண்டலின் போதும், மக்களுடனான திருத்தந்தையின் ஆழமான தொடர்பை எடுத்துரைத்த முதுபெரும் தந்தை மினாசியன், அவர்கள்,  திருத்தந்தை மக்களின் வலியை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டார், அதை நம்பிக்கையின் உணர்வாக எவ்வாறு மாற்றினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

உண்மையான அமைதிக்கு சமூக ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் நீதி மற்றும் மாற்றம் தேவை என்று வலியுறுத்திய முதுபெரும் தந்தை மினாசியன் அவர்கள், குறிப்பாக, எருசலேமில் 2033-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் மீட்பு யூபிலி விழாவிற்கு முன்னதாக, கிறிஸ்தவத் திருச்சபைகளுக்கிடையே நிலவிட வேண்டிய ஒன்றிப்புக்கான திருத்தந்தையின் அழைப்பையும் பிரதிபலித்தார்.

1,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் திருத்தந்தையின் திருப்பலியில் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்த வலிமை வாய்ந்த காட்சியை நினைவு கூர்ந்த முதுபெரும் தந்தை மினாசியன் அவர்கள், "இதனால்தான் நாம் ஒருபோதும் தனியாக இல்லை. நாம் ஒன்றிணைந்து நடப்பதைத் தொடர்ந்திட வேண்டும்" என்று கூறி தனது நேர்காணலை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 டிசம்பர் 2025, 13:46