லெபனோன் நாட்டில் திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 30, ஞாயிறன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் துருக்கி நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு உள்ளூர் நேரம் மாலை 02.45 மணிக்கு இத்தாலிய விமானத்தில் லெபனோனின் தலைநகர் பெய்ரூத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
1.128 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணிநேரங்கள் கடந்து லெபனோனின் உள்ளூர் நேரம் மாலை 03.15 மணிக்கு அதன் தலைநகர் பெய்ரூத்தை வந்தடைந்தார் திருத்தந்தை. அதன்பிறகு லெபனோனின் அரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்தித்த பின்னர் மாலை 06.00 மணிக்கு அரசுத் தலைவர் மாளிகையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அருளுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்குப் பிறகு திருப்பீடத் தூதர் அலுவலகத்தை அடைந்து இரவு உணவு உண்டு உறங்கி ஓய்வெடுத்தார் திருத்தந்தை. இத்துடன் திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
