திருத்தந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் டிசம்பர் 1, திங்கள்கிழமையன்று, திருப்பீடத் தூதர் அலுவலகத்தில் தனிப்பட்ட விதத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அதன்பிறகு காலை 09.45 மணிக்கு அன்னயாவிலுள்ள புனித மாரூன் துறவு மடத்திலுள்ள புனித சார்பலின் கல்லறைக்குச் சென்று இறைவேண்டல் செய்து அருளுரை ஒன்று வழங்கினார்.
அதன் பின்னர் காலை 11.20 மணிக்கு ஹரிசாவிலுள்ள லெபனோன் அன்னை ஆலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத் திருத்தந்தை அருளுரை வழங்கினார்.
இவ்வுரைக்குப் பின்பு திருப்பீடத் தூதர் அலுவலகத்திற்குத் திரும்பிய திருத்தந்தை மதிய உணவு உண்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். அதன்பின்பு, மாலை 04.00 மணிக்கு பெய்ரூத்திலுள்ள லெபனோனின் மறைச்சாட்சிகள் சதுக்கத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் மதங்களுக்கு இடையேயான கூட்டம் ஒன்றில் திருத்தந்தை அருளுரை வழங்கினார்.
அதற்கடுத்து திருத்தந்தையின் அன்றைய நாள் இறுதி நிகழ்வாக, மாலை 05.45 மணிக்கு லெபனோனின் பிகெர்கேவிலுள்ள அந்தியோக்கியாவின் மாரோனைட் முதுபெரும் தந்தை ஆட்சி பீடத்திற்கு முன் உள்ள சதுக்கத்தில் இளையோரைச் சந்தித்து அவர்களுக்கு அருளுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்குப் பிறகு மாலை 07.00 மணிக்கு திருப்பீடத் தூதர் அலுவலகத்திற்குத் திரும்பிய திருத்தந்தை இரவு உணவு உண்டு உறங்கி ஓய்வெடுத்தார். இத்துடன் திருத்தந்தையின் லெபனோன் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
