ஆப்பிரிக்கப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தைக்குக் குழந்தைகளின் அன்புப் பரிசு

உக்ரைனில் இருந்து வந்த 2,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் காசா பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு அளிப்பதில் பெயர் பெற்ற குழந்தை இயேசு மருத்துவமனை, படைப்பாற்றல் மிக்க செயல்பாடுகள் மூலம் அமைதியை ஊக்குவிக்கிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம்  லியோ அவர்கள் ஏப்ரல் 13, திங்களன்று, ஆப்பிரிக்காவிற்கான தனது திருத்தூதுப் பயணத்தை, திருத்தந்தையின் விமானத்தில் ஒரு நெகிழ்ச்சியான தருணத்துடன் தொடங்கினார். அங்கு  உரோமையிலுள்ள குழந்தை இயேசு மருத்துவமனையைச் சேர்ந்த சிறுவர்கள் வரைந்த ஓவியம் ஒன்றை அவரிடம் வழங்கினர்.

அந்த ஓவியத்தில், திருத்தந்தை நற்செய்தியை ஏந்தியபடி ஒரு அமைதியின் தூதுவராக சித்தரிக்கப்பட்டிருந்தார்; அவருக்கு அருகில் குழந்தைகள் சிலர் கட்டிடக் கட்டைகளைக் கொண்டு அடையாளப்பூர்வமாக அமைதியைக் கட்டியெழுப்புவது போல் வரையப்பட்டிருந்தது. அவர் அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அந்த ஓவியம் அமைந்திருந்தது.

உக்ரைனில் இருந்து வந்த 2,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் காசா பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு அளிப்பதில் பெயர் பெற்ற அந்த மருத்துவமனை, படைப்பாற்றல் மிக்க செயல்பாடுகள் மூலம் அமைதியை ஊக்குவிக்கிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஏப்ரல் 2026, 11:54