கேமரூனில் திருத்தந்தை கேமரூனில் திருத்தந்தை  (ANSA)

திருத்தந்தையின் கேமரூன் பயணத்தின் சிறப்பு தகவல்கள்

திருத்தந்தை அவர்கள் புனித பவுல் கத்தோலிக்க மருத்துவமனைக்கு சென்று அங்குள்ளவர்களைச் சந்தித்தார். மருத்துவமனையில் சிற்றாலயத்தில் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, அங்கு பணிபுரியும் பணியாளர்கள், நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் ஆசீயும் கொடுத்தார்.

திருத்தந்தை அவர்கள் தன்னுடைய செய்தியில் ஒரு அழகான செய்தியை வெளியிட்டுள்ளார். இது ஆப்பிரிக்க நாடுகளுக்கான செய்தியல்ல, மாறாக நாம் உலக மக்கள் அனைவருக்குமான செய்திகாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லோருக்கும் உணவு உண்டு, அது எல்லோருக்கும் கொடுக்கப்பட்டால். பறித்துக்கொள்ளும் கரங்களாக இல்லாமல், கொடுக்கும் கரங்களாக நம் கரங்கள் மாறி, எல்லாருக்கும் கொடுத்தால், எல்லோருக்கும் உணவு உண்டு. ஏனென்றால் உணவு என்பது நிரம்பியிருக்கிறது. அதேபோல இது பற்றாக்குறையினால் வழங்கப்படவில்லை, சண்டையினால் திருடப்படவில்லை, உணவு இல்லாதவர்கள் முன், அளவுக்கு அதிகமாக உண்பவர்களால் இது வீணாக்கப்படவும் இல்லை."

மன்னிப்பையும், ஒருங்கிணைவையும் நிலைநாட்டுவதற்கான ஒவ்வொரு முயற்சியும் ஆதரவு தேடும் மனிததிற்கான ஒரு சிறிய துண்டு உணவாக மாறுகிறது. ஆனால் இது மட்டும் போதாது. உடலுக்குத் தேவையான உணவோடு, ஆன்மாவுக்குத் தேவையான இறைவனது வார்த்தையும் (கிறிஸ்துவின் உடல்) அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேமரூன் நாட்டின் துவாலா நகரில் கடந்த 17 ஆம் தேதி திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் சுமார் 1,20,000 நம்பிக்கையாளர்கள் கலந்துகொண்டனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருத்தந்தை அவர்கள் புனித பவுல் கத்தோலிக்க மருத்துவமனைக்கு சென்று அங்குள்ளவர்களைச் சந்தித்தார். மருத்துவமனையில் சிற்றாலயத்தில் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, அங்கு பணிபுரியும் பணியாளர்கள், நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் ஆசீயும் கொடுத்தார். குறிப்பாக குழந்தைகள், முதியவர்களை அவர்கள் தங்கியிருந்த அறைகளுக்கே சென்று சந்தித்து. உரையாடி, ஆசீர் வழங்கினார். இது அங்கிருக்கும் பயணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொடுத்தது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஏப்ரல் 2026, 13:01